ஆட்டோ, டாக்ஸி ஓட்ட இனி கமர்ஷியல் லைசன்ஸ் தேவையில்லை...
Posted Date : 14:03 (21/04/2018)
Last Updated : 14:03 (21/04/2018)

டாக்ஸி, ஆட்டோ, மோட்டார் ரிக்‌ஷா, உணவு டெலிவரி செய்ய பயன்படுத்தும் டூ வீலர் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு இனி கமர்ஷியல் டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை. சாதாரண 4-வீலர் மற்றும் 2-வீலர் லைசன்ஸ் போதும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய போக்குவரத்து துறை அறிவுறுத்தல்.

 

டாக்ஸி, ஆட்டோ, லைசன்ஸ்


ஜுலை 2017 உச்ச நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க சொல்லிக் கடந்த வியாழக்கிழமை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அணைத்து மாநில அரசுகளுக்கு ஆலோசனை ஒன்றை அனுப்பியுள்ளது. ஜூலை 3, 2017 அன்று கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆட்டோ, டாக்ஸி, மோட்டார் ரிக்‌ஷா போன்ற வாகனங்களை ஓட்ட கமர்ஷியல் லைசன்ஸ் தேவையில்லை சாதாரண தனிநபர் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களே இந்த வாகனங்களை கையாளலாம். இந்த உத்தரவை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் டாக்ஸி, ஆட்டோ தொழிலில் மக்கள் அதிகம் ஈடுபடுவார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
 
 
டாக்ஸி, ஆட்டோ, லைசன்ஸ்
 

இந்தத் திட்டம் அமலுக்கு வருவதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் ஆண்டுமுழுவதும் காத்திருந்து பேட்ஜ் போட்டு வாங்கவேண்டிய கமர்ஷியல் லைசன்ஸ் முறை இருக்காது. டாக்ஸி, ஆட்டோ போன்ற வாகனங்களின் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்கலாம். அதுமட்டுமல்ல ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ், ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் தொழில்களிலும், பகுதி நேர டாக்ஸி டிரைவர் தொழிலிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவந்த கமர்ஷியல் பேட்ஜுக்கான ஆர்டிஓ அலுவலக கையூட்டுகளும் இருக்காது. மேலும், இந்தத் திட்டம் அமலுக்கு வருவதால் ஆட்டோ, டாக்ஸி, ரிக்‌ஷாக்கள் அதிகரிக்கும் இதனால் தனியார் வாகனங்களைக் குறைக்கலாம். அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை, பார்க்கிங் இடவசதி போன்ற சிக்கல்கள் இருப்பதால் ஒரு டாக்ஸி 6 கார்களையும், 1 ஆட்டோ 12 கார்களையும் குறைத்துவிடுவதாக நெடுஞ்சாலை துறை கூறுகிறது. பொது போக்குவரத்து அதிகரிப்பதால் காற்று மாசையும் குறைக்கலாம். தமிழக அரசு விரைவில் இந்தத் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் என்று நம்புவோம்.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   டாக்ஸி, ஆட்டோ, லைசன்ஸ், கமர்ஷியல் வாகனம்