அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள்...
Posted Date : 21:41 (22/04/2018)
Last Updated : 21:41 (22/04/2018)

ஜனவரி 1, 2019 முதல் அணைத்து வாகனங்களும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுடன் வரப்போகிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை கடந்த வாரம் இதற்கான சட்டவடிவை தாக்கல் செய்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை கட்டாயமாக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 13 நகரங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் மாநில அரசுகள் இன்னும் இந்த முறையைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை.

உயர் பாதுகாப்பு, நம்பர் பிளேட், வாகனப் பதிவு, மோட்டார் வாகன சட்டம்

இந்த நம்பர் பிளேட்டுகளை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்தான் தயாரிக்க முடியும் என்று விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையைத் தளர்த்த கோரி, ஸ்டிக்கர் தொழில் நுட்பம் மூலம் நம்பர் பிளேட்டுகள் தயாரித்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுப்போட்டு இந்த முறைக்கும் தடை விதித்தனர். தடை நீக்கப்பட்ட பின்பும் இதை தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை. இந்த அணைத்துச் சிக்கல்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்க சட்டத்தை மாற்றியமைத்து புதிய முறை கொண்டு வருகிறது மத்திய அரசு. அதன்படி, இனிமேல் வரும் வாகனங்களை RTO மூலம் நேரடியாகப் பதிவு செய்து டீலர்களே நம்பர் பிளேட் பொருத்தித் தந்துவிடுவார்கள்.

 

உயர் பாதுகாப்பு, நம்பர் பிளேட், வாகனப் பதிவு, மோட்டார் வாகன சட்டம்

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டை ஒரு முறை பொருத்தி விட்டால் அகற்றவோ, கழற்றி வேறு வாகனத்தில் பொருத்தவோ முடியாது. அப்படி முறைகேடு செய்ய முயற்சித்தால், அந்த நம்பர் பிளேட் தானாக அழிந்துவிடும் வகையில், அது 'ஸ்நாப் லாக்தொழில்நுட்ப வசதி மூலம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நம்பர் பிளேட்களில் உள்ள விவரங்களை சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்தே காண முடியும். அதற்கேற்றவாறு இதில் குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்டு இருக்கும். நம்பர் பிளேட்டில் உள்ள 'ரெட்ரோ ரிஃப்ளக்டிவ்ஸ்டிக்கரும் இருக்கும், அதில் 'இந்தியாஎன்று 45 டிகிரியில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அத்துடன் இடது ஓரத்தில் நீல நிறத்தில் .என்.டி என்ற எழுத்துகள் இருக்கும். இதன் விலை சுமார் 1,000 ரூபாய் முதல் 1,500 வரை இருக்கும்.

நம்பர் பிளேட்டை அகற்ற வேண்டியிருந்தால் டீலர்கள் மூலமே அகற்றி புதிய நம்பர் பிளேட்டுகளை பொறுத்த முடியும்.

 

- ரஞ்சித் ரூஸோ.

TAGS :   உயர் பாதுகாப்பு, நம்பர் பிளேட், வாகனப் பதிவு, மோட்டார் வாகன சட்டம்