போர்ஷே இன்ஜின் துறை தலைவர் கைது!
Posted Date : 14:55 (24/04/2018)
Last Updated : 14:55 (24/04/2018)

 

போர்ஷே நிறுவனத்தின் இன்ஜின் துறையின் தலைவர் ஜோர்க் கெர்னெர் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபோக்ஸ்வாகன் டீசல் இன்ஜின் மாசு கட்டுப்பட்டு பரிசோதனையில் நடைபெற்ற மோசடி காரணமாக இவரை கைது செய்துள்ளார்கள். 

போர்ஷே
 

கடந்த 2015-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த ஃபோக்ஸ்வாகன் மோசடி வழக்கு இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திடம்தான் போர்ஷே இருப்பதால், ஆடி இன்ஜினில் நடந்த முறைகேடு இந்நிறுவன இன்ஜின்களிலும் நடந்திருக்கும் என்று சந்தேகித்து ஜோர்க் கெர்னெரை  கைது செய்துள்ளார்கள். இவரின் கைதுக்கு முன்பு போர்ஷே நிறுவனத்தை சேர்ந்த சில தலைவர்களின் அலுவலகம் மற்றும் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

 

போர்ஷே
 

2009 முதல் 2015 வரை அமெரிக்காவில் தயாரித்து விற்கப்பட்ட 2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஆடி, ஃபோக்ஸ்வாகன் கார்களைப் பரிசோதித்தபோது அதில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி, காரில் உள்ள மாசுக் கட்டுப்பாடு அளவை குறைவாக இருப்பதாகக் காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த கார்களை சாலையில் பரிசோதித்தபோது, மாசு அளவுகள் 40 மடங்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இந்த கார்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு கலந்த புகையால் ஆஸ்துமா, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஜெட்டா, கோல்ஃப், பீட்டில், ஆடி A3, பஸாத் ஆகிய கார்களில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தவுடன் ஃபோக்ஸ்வாகன் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரியான மார்ட்டின் வின்ட்டர்கானைப் பணியைவிட்டு நீக்கப்பட்டார். பெருந்தொகையும் அபராதமாக இந்நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கபட்டது.

போர்ஷே
 

போர்ஷே நிறுவனம் இந்த டீசல் இன்ஜின் மோசடி மென்பொருளை தயாரித்திருக்கும் அல்லது இதை பயன்படுத்தி இருக்கும் என்ற குற்றச்சாட்டுகள் வைத்து கைது நடவடிக்கை நடந்துள்ளது. ஃபோக்ஸ்வாகன் மோசடியில் போர்ஷே நிறுவனத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் பிலும். 

 

- ரஞ்சித் ரூஸோ.

TAGS :   போர்ஷே, இன்ஜின், ஃபோக்ஸ்வாகன் மோசடி