மஹிந்திராவின் புதிய ஜெனரேட்டர்கள் அறிமுகம்
Posted Date : 16:23 (24/04/2018)
Last Updated : 16:27 (24/04/2018)

 மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நேற்று, அதிக பவர் தரக்கூடிய புதிய டீசல் ஜெனரேட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில் கேஸ் ஜெனரேட்டர்ரை விற்பனைக்கு கொண்டுவந்த இந்நிறுவனம் தற்போது 400/500/625 kVA டீசல் ஜெனரேட்டர்களை அறிமுகப்படுத்தி தனது பவரால் தொழிலை பெரிதாக்கியுள்ளது.

 

 மஹிந்திரா பவரால்
 
பெர்கின்ஸ் நிறுவனத்தின் 2000 சீரிஸ் இன்ஜினை அடித்தளமாக வைத்து சென்னையில் உள்ள மஹிந்திரா ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினரால் வடிவமைக்கப்பட்டு பூனே தொழிற்சாலையில் தயாராகியுள்ளன இந்த ஜெனரேட்டர்கள். பெர்கின்ஸ் நிறுவனத்தின் 12.5 லிட்டர் மற்றும் 18 லிட்டர் இன்ஜின் கொண்ட இந்த புதிய சீரிஸ் ஜெனரேட்டர்களின் அறிமுகத்தால் தற்போது 5kVa முதல் 625kVA வரை மஹிந்திராவிடம் ஜென்செட்கள் உள்ளது. 
மஹிந்திரா பவரால் 
வெளிவந்திருக்கும் புதிய ஜெனரேட்டர்களில் மஹிந்திராவின் DiGi-SENSE தொழில்நுட்பம், டர்போகார்ஜர், ஏர்-டூ-ஏர் கூலிங் தொழில்நுட்பங்கள் உள்ளது. "ஜெனரேட்டர்கள் செக்மன்டிலேயே அதிக எரிபொருள் சேமிப்பு கொண்டதாகவும், செலவை மிச்சப்படுத்துவதாகவும், பெரிய சர்வீஸ் நெட்வர்க் கொண்டதாகவும் மஹிந்திரா ஜெனரேட்டர்கள்தான் உள்ளது." என்று மஹிந்திரா பவரால் தலைவர் ஹேமன்த் சிக்கா கூறினார்.
 
மேலும், "2001-ம் ஆண்டு ரூ.6.2 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட மஹிந்திராவின் பவரால் பிசினஸ் இப்போது 14,000 கோடி ரூபாய் தொழிலாக வளர்ந்துள்ளது. தற்போது இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் இல்லாதால் இந்த ஜெனரேட்டர்கள் பல சிறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தற்போது சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளில் இந்த அதிக பவர் தரும் ஜெனரேட்டர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆப்ரிக்கா, வங்கதேசம், நேபால் போன்ற நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றும் கூறினார்.
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   மஹிந்திரா பவரால், மஹிந்திர & மஹிந்திரா