விற்பனைக்கு வந்துவிட்டது டிரையம்ப் ஸ்பீடு மாஸ்டர்...
Posted Date : 19:25 (24/04/2018)
Last Updated : 19:55 (24/04/2018)

 

டிரையம்ப் தனது புதிய போனவில்லி ஸ்பீடு மாஸ்டர் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. கடந்த மாதம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கின் விற்பனை தமிழகத்தில் தொடங்கிவிட்டது.

 

 டிரையம்ப் போனவில்லி

 
டிரையம்ப் போனவில்லி பாபர் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவானது ஸ்பீடு மாஸ்டர். இந்நிறுவனத்தின் கிளாசிக் மாடர்ன் பைக் வரிசையில் த்ரக்ஸ்டன் 1200-க்கு அடுத்து விலை உயர்ந்த பைக்காக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது இந்த பைக். பாபர் பைக்குகளின் மேல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், ஒப்பிட்டு பார்த்தால் பல அடிப்படை வித்தியாசங்கள் உள்ளன.
 
 
போனவில்லி ஸ்பீடு மாஸ்டர் 
 
12 லிட்டர் பெட்ரோல் டேங்க், பின்பக்க சீட்டு,  hard-tail ஸ்டைல், முழு  LED ஹெட் லைட்டுகள்,  curved back ஹேண்டல்பார், பாபரை விட அதிகமாக முன்பக்கம் தள்ளியிருக்கும் ஃபூட் பெக் எல்லாம் குறிப்பிடும்படியான வித்தியாசங்கள். பின் சீட்டை வைக்க பைக்கின் சப்-ஃபிரேமையே மாற்றியுள்ளார்கள் டிரையம்ப் இன்ஜினியர்கள். பாபரின் அதே 1200 cc Parallel twin இன்ஜின்தான். பவர்-டார்க்கில் கூட மாற்றங்கள் இல்லை (76 bhp மற்றும் 10.8 kgm டார்க்). அனால், தோராயமாக முந்தைய ஸ்பீடு மாஸ்டர் பைக்கை விட 42 சதவிகிதமும், டிரையம்ப் போனவில்லி  T120  விட 10 சதவிகிதமும் பவர் மற்றும் டார்க் அதிகமாக உள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன் பக்கம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளது. 16 இன்ச் ஸ்போக் வீல்கள், 130/90 மற்றும் 150/80 செக்‌ஷன் ஏவான் டயர்கள் உள்ளன.  
 
டிரையம்ப்
 
Road மற்றும்  Rain என இரண்டு ரைடிங் மோடுகளோடு வருகிறது டிரையம்ப் ஸ்பீடு மாஸ்டர். டிராக்‌ஷன் கன்ட்ரோல்,  ride-by-wire, ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல் எனத் தொழில்நுட்பங்களிலும் பல மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் உள்ள முதல் போனவில்லி பைக் இதுதான். பிரேக்கிங் வேலைகளுக்காக முன்பக்கம் 310 mm டிவின் டிஸ்க்கும் பின்பக்கம் 255 mm சிங்கல் டிஸ்க்கும், 2 பிஸ்டன் பிரெம்போ கேளிப்பர்களோடு கூட்டாக வருகின்றன. இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மற்றும் ஹார்லி டேவிட்ஸன் ஸ்போர்ட்ஸ்டர் 1200 பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள ஸ்பீடுமாஸ்டர் டிரையம்புக்கு நல்ல விற்பனையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
போனவில்லி ஸ்பீடு மாஸ்டர்
 
ஹைவே, மேவரிக் என இரண்டு கஸ்டம் அப்ஷன்களோடும், விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க 130 ஆக்சஸரிகளோடும், மூன்று நிறங்களில் வருகிறது டிரையம்ப் ஸ்பீடு மாஸ்டர். இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூ.13,12,936. சென்னையில் முன்பதிவு செய்பவர்களுக்கு 15 முதல் 30 நாள்களுக்குள் பைக் டெலிவரி செய்யப்படுகிறது. 

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   டிரையம்ப் ஸ்பீடு மாஸ்டர், டிரையம்ப் பைக், சென்னை டிரையம்ப்