8.75 லட்சத்துக்கு யாரிஸ் செடான்..டாப் வேரியன்டின் விலை என்ன?
Posted Date : 11:31 (25/04/2018)
Last Updated : 11:40 (26/04/2018)

 போட்டி குறைவாக இருந்த மிட் சைஸ் செடான் செக்மன்டில் டொயோட்டாவின் யாரிஸ் களமிறங்கிவிட்டது. 8.75 முதல் 14.07 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது. கரோலா ஆல்ட்டிஸின் டிசைனை அடிப்படையாக வைத்துத் தயாராயிருக்கும் யாரிஸ் செடான் காரின் முன்பதிவுகள் ஆரம்பித்திருந்த நிலையில் அடுத்த மாதம் முதல் கார் டெலிவரி செய்யப்படுகிறது. 

 டொயோட்டா யாரிஸ்

டொயோட்டாவின் 1.5 லிட்டர் டூயல் VVT-i பெட்ரோல் இன்ஜின் மட்டுமே வருகிறது. இந்த இன்ஜின் 107 bhp பவரையும், 14 kgm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட யாரிஸில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது.

 

 டொயோட்டா யாரிஸ்

 

சென்மன்டிலேயே முதல் முறையாக பவர் சீட், ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்டுகள், முன் பக்க பார்க்கிங் சென்ஸார், 60:40 ஸ்பிலிட் சீட், adjustable neck restraints, பேடல் ஷிஃப்ட் என்று பல அம்சங்கள் வந்துள்ளன. LED DRL, ஷார்ப் ஹெட்லைட்ஸ், உருண்டையான பனி விளக்குகள், க்ரோம் கதவுக் கைப்பிடிகள் என்று வழக்கமான சில விஷயங்களும், டீசன்டான் பிஸினஸ்மேன் லுக்கும் காரில் உள்ளது. 15 இன்ச் வீல்கள் மற்றும் டயர்கள் சிறியது. ஆனால், வீல் ஆர்ச் பெரிதாக இருக்கிறது. சேஃப்டியில் பஞ்சமில்லாமல்  7 காற்றுப் பைகள், எல்லா வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ். மலையேற்றத்தில் கார் நின்றுவிட்டால் ஸ்டார்ட் செய்ய ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஏபிஎஸ், EBD மற்றும் ESP. என்று சேஃப்டியிலும் செக்மன்டில் டாப். அனைத்து வேரியன்டிலும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் வருகிறது.

 

டொயோட்டா யாரிஸ்

 

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வாகன் வென்டோ, ஸ்கோடா ரேபிட் போன்ற கார்களுக்கு யாரிஸின் விலை போட்டிபோடும் விதமாக இருக்கிறது. சியாஸ் காரின் பேஸ் வேரியண்டை விட ரூ.74000 தான் விலை அதிகம். ஆனால் சியாஸ் டாப் வேரியன்டை யாரிஸ் டாப் வேரியன்ட் விலை 3 லட்சம் ரூபாய் வரை அதிகம் என்பது சியஸை கொடுக்கும் காசுக்கு மதிப்பு மிக்க காராக காட்டுகிறது. இந்திய சந்தையில் வெற்றியடையுமா யாரிஸ்!

 

- ரஞ்சித் ரூஸோ.

TAGS :   டொயோட்டா யாரிஸ், டொயோட்டா, இந்திய செடான் கார்