ரூ.5.09 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்
Posted Date : 13:00 (26/04/2018)
Last Updated : 14:52 (26/04/2018)
ஃபோர்டின் புதிய க்ராஸ்ஓவர் காரான ஃப்ரீஸ்டைல் விற்பனைக்கு வெளிவந்துவிட்டது. இந்த காரின் முன்பதிவுகள் மாத தொடக்கத்தில் அமேஸான் இணையதளத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது ஷோரூம்களில் ரூ. 5,09,000 முதல் ரூ.7,89,000 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஃப்ரீஸ்டைல்.
 

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

 
காம்பேக்ட் க்ராஸ்ஓவராக வந்துள்ள ஃப்ரீ ஸ்டைலில் ஸ்மோக்டு எஃபெக்ட் ஹெட்லைட்ஸ், மெஷ் கிரில், புதிய ‘V’ வடிவ பானெட், ஸ்கிட் பிளேட், ஸ்போர்ட்டி அலாய் வீல்ஸ் என்று ஃபிகோவில் உள்ள சில அம்சங்கள் பிரதிபலிக்கிறது. ஆனால், ஃபிகோவைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் 15 மிமீ அதிகம். பாடி கிளாடிங், ஃபிகோவைவிட அகலமான செக்ஷன் கொண்ட (185/60 R15) டயர்கள், ரூஃப் ரெயில், ஸ்கஃப் பிளேட்டுகள் என க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கான விஷயங்களும் உள்ளன. 8 ஸ்போக் 15 இன்ச் அலாய் வீல்கள் சிறப்பு. 
 
ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்
 
இந்த காருக்கு இன்னொரு சிறப்பு அதன் இன்ஜின். சமீபத்தில் வெளியான 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டிராகன் சீரிஸ் இன்ஜினை இதில் பொருத்தியிருக்கிறார்கள். 96 bhp பவர் மற்றும் 12.0 kgm டார்க் தரும் இந்த இன்ஜின் ஃபோர்டின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கூட்டணியாக வருகிறது. டீசல் வேரியன்டில் இருப்பதோ ஃபிகோ மற்றும் ஆஸ்பயரில் இருக்கும் 1.5 லி TDCI இன்ஜின். இது 100 bhp பவரும், 21.5 kgm டார்க்கும் தரும். Getrag ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 2 காற்றுப் பைகள் (டாப் வேரியன்டில் மட்டும் 6 காற்றுப்பை), பாடி ரோல் கட்டுப்படுத்த முன் பக்க ஆன்ட்டி ரோல் பார், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ESC (Electronic Stability Control), புதிதாக ARP (Active Rollover Prevention) போன்ற வசதிகள் உள்ளன. 


 
வசதிகளை பொருத்தவரை சென்டர் கன்ஸோலில் இருக்கும் 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் ஃபோர்டு SYNC3 ஆப்ஷன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் உண்டு. ரிவர்ஸ் கேமரா, கீலெஸ் என்ட்ரி-கோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட்ஸ், 15 இன்ச் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர் என வசதிகள் லிஸ்ட பெரிதாக இருந்தாலும் நேவிகேஷன் வசதி இல்லை, 257 லிட்டர்தான் பூட் ஸ்பேஸ். Canyon Ridge, Absolute Black, White Gold, Smoke Grey, Moondust Silver மற்றும் Oxford White என 6 நிறங்களிலும், BODY STRIPE KIT, ROOF WRAP என இரண்டு ஸ்டிக்கர் ஆப்ஷன்களோடும் வருகிறது ஃப்ரீஸ்டைல். இதனோடு, 14 விதமான ஆக்ஸசரிகளும் விற்பனை செய்கிறார்கள். மற்ற ஹேட்பேக்குகளை விட 20 சதவிகித விலை குறைவான ஸ்பேர் பார்ட் விலை, 10,000 கி.மீ-க்கு ஒரு முறை சர்வீஸ் என பராமரிப்புகளின் விலையையும் குறைத்திருப்பதாக சொல்கிறார்கள். Ambient, Trend, Titanium, Titanium + என நான்கு வேரியன்டுகளாக வருகிறது ப்ரீஸ்டைல்.  5 லட்சம் என்ற ஆரம்ப விலை மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலான விலை. ஃபிகோவை விட 10 முதல் 15000 வரை மட்டுமே அதிகம்.

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஃபோர்டு, ஃப்ரீஸ்டைல், க்ராஸ் ஓவர், Freestyle, crossover