ஹோண்டா அமேஸின் வேரியன்ட்கள் விவரம் வெளியானது...
Posted Date : 16:01 (26/04/2018)
Last Updated : 16:07 (26/04/2018)

 காம்பாக்ட் செடான் டாக்ஸிகளுக்கு மட்டுமல்ல அலுவலகம், டூர் என்று அனைத்துக்குமே பயன்படுத்தலாம் என செக்மன்டின் மதிப்பை உயர்த்திய கார் ஹோண்டாவின் அமேஸ். ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு அடுத்த மாதம் வெளியாகத் தயாராக இருக்கிறது இரண்டாம் தலைமுறை அமேஸ். முன்பதிவுகள் முன்பே தொடங்கிவிட்ட நிலையில் இப்போது, வேரியன்டுகளின் விவரம் வந்துள்ளது.

 ஹோண்டா அமேஸ்

 E, S, V மற்றும்  VX என நான்கு வேரியன்டுகளாக வரும் இந்த காரில் நான்கு இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. 90 bhp பவர் தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 bhp பவர் தரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வருகின்றன. இதற்குக் கூட்டணியாக 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும்  CVT ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் வருகின்றன. செக்மன்டிலேயே முதல் முறையாக டீசல் இன்ஜினுடன் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் வருகிறது. ஆனால், டீசல் மேனுவல் வேரியன்டை விட இதில் 20 bhp பவரும் 40 Nm டார்க்கும் குறைவு.  CVT ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ்  S மற்றும்  V வேரியன்டில் மட்டுமே வருகிறது. டாப் வேரியன்டான  VX-ல் வரவில்லை. 
 
ஹோண்டா அமேஸ்

மிட் சைஸ் செடான் செக்மன்டில் முக்கிய புள்ளியாக வலம்வரும் சிட்டியின் வடிவமைப்பை இன்ஸ்பிரேஷனாக கொண்டு வடிவமைக்கப்பட்டது புதிய அமேஸ். பழைய காரை விட அதிக வசதிகளும், கம்பீரமான டிசைனும் கொண்டுள்ளது. காரின் எடை 905 Kg முதல் 1039 Kg வரை உள்ளது. எடை குறைந்துள்ளது, ஆனால் அளவு கொஞ்சம் பெரிதாகியுள்ளது. முன்பை விட 5 mm கூடுதலாகி இப்போது 3995 mm நீலத்தில் உள்ளது, 15 mm பெருத்து 1695 mm அகலமாகவும், வீல்பேஸ் 65 mm நீண்டு இப்போது 2470 mm ஆக இருக்கிறது. உயரம் 5 mm குறைந்து 1500 mm ஆக உள்ளது. காரின்  Turning diameter பெட்ரோலுக்கு 9.4 m என்றும் டீசலுக்கு 9.8 m என்றும் வேறுவேறாக இருக்கிறது. குறைந்த விலை வேரியன்டான  E மற்றும்  S மாடலில் 14 இன்ச் ஸ்டீல் வீல்கள் மட்டுமே உள்ளன, மற்ற இரண்டு வேரியன்டிலும் 15 இன்ச் அலாய் வீல்கள் வருகின்றன. இரண்டிலுமே 175/65 ப்ரெஃபைல் டயர்கள்தான். 
 
 


டிசைன் மட்டுமல்ல ஸ்டீயரிங் வீலையும் சிட்டியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் அமேஸின் அதிகபட்ச வசதியாக - எலெக்ட்ரிக் விங் மிரர் மட்டும்தான் இருக்கும். ஆனால், புதிய அமேஸில் ஆண்டிராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,  wifi வசதியுடன், லைவ் நேவிகேஷன், ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல்ஸ் மிட் சைஸ் செடான் போல வசதிகள் அதிகமாக உள்ளது. முன்பை விட 45 mm அதிக ஷோல்ட்ர் ரூம், 10 mm அதிக ஹெட்ரூம், 25 mm அதிகம் லெக்ரூம், 20 லிட்டர் கூடுதல் (420 லிட்டர்) பூட் ஸ்பேஸ்... இப்போது இருக்கும் அமேஸ் ரூ.5.59 முதல் ரூ.8.54 லட்சம் வரை உள்ளது. புதிய அமேஸின் விலை இதை விட 20,000 முதல் 50,000 வரை கூடுதல் விலை இருக்கும்.

 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   ஹோண்டா அமேஸ், அமேஸ் கார், வேரியன்ட் பட்டியல், அமேஸ் காரின் விவரம்