பாஹா போட்டிக்கான விண்ணப்ப பதிவு தொடங்கிவிட்டது...
Posted Date : 19:04 (26/04/2018)
Last Updated : 19:04 (26/04/2018)

 

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் கனவு போட்டியான 'மஹிந்திரா மற்றும் எஸ்.ஏ.இ இந்தியா" நடத்தும் பாஹா போட்டியில் கலந்துகொள்வதற்கான  விண்ணப்ப பதிவு தொடங்கவிட்டது. 12-வது அண்டு அடியெடுத்துவைக்கும் இந்தப் போட்டியில் பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம்.


பாஹா இந்தியா போட்டி

பாஹா போட்டியில் கலந்துகொள்வதற்குப் பல சவாலான சோதனைகள் உள்ளன. இதில் தேர்வுபெற்றால்தான், இறுதிப் போட்டியான என்டியூரன்ஸ் ரேஸுக்கு செல்ல முடியும். விலை, எடை, ஸ்டீயரிங், சஸ்பென்ஷன், இன்ஜின், ஏரோடையமிக், சேஸி, பவர், டார்க், ஓட்டுதல் திறமை என இன்ஜினீயரிங் சார்ந்த பல்வேறு நுட்பங்களைக் கொண்டு ஒவ்வொரு டீமும் ஒரு    All terrain vehicle-ஐ உருவாக்கவேண்டும். ஒவ்வொரு அணியிலும் 5 முதல் 25 பேர் வரை இருக்கலாம். முதலில் டீமை ரெஜிஸ்டர் செய்துவிட்டு வாகனத்தை டிசைன் செய்யவேண்டும். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் கட்டம் ஜனவரி 24   th முதல் 27   th வரை நடைபெறும். இரண்டாவது போட்டி மார்ச் 8 முதல் 10 தேதி வரை நடைபெறும்.

பாஹா இந்தியா போட்டி

பதிவுசெய்யும் போட்டியாளர்கள் அனைவரும் வரும் ஜூலை 13,14 தேதிகளில் நடைபெறும் விர்சுவல் பாஹா எனப்படும் முதல்நிலை போட்டியில் கலந்துகொள்வது அவசியம். போட்டியில் தேர்வாகும் டீம் மட்டுமே அடுத்த கட்டமான தயாரிப்புக்கு முன்னேறும். E-பாஹா எனப்படும் மின்சார வாகன போட்டியில் கலந்துகொள்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக முதல் முறை கலந்துகொள்ளும் டீம்களுக்கு 1.5 லட்ச ரூபாய் வரை எஸ்.ஏ.இ இந்தியா நிதி உதவி செய்கிறது.

பாஹா இந்தியா போட்டி

பாஹா போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 20, 2018-க்குள் விண்ணப்பிக்கவேண்டும். இதற்கான தொகை முதல் கட்டத்துக்கு ரூ.20,000. விர்ச்சுவல் பாஹாவில் தேர்வான பிறகு இரண்டாம் கட்டமாக ரூ.30,000 என மொத்தம் 50,000 ரூபாய். டீமில் பெண்கள் இருந்தால் இரண்டாம் ரிஜிஸ்டிரேஷனின் போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1000 என விண்ணப்பக் கட்டண தள்ளுபடி கிடைக்கும். 

பாஹா இந்தியா போட்டி

போட்டியில் வெற்றி என்பதைத் தாண்டி நம் திறமையை பரிசோதிக்கச் சரியான களம் இது. உலகின் முன்னணி நிறுவனங்களான பாஷ், கான்டினென்டல், கம்மின்ஸ்,    L&T, பாரத் பெட்ரோலியம் போன்ற பல நிறுவனங்கள் இந்தப் போட்டியை நடத்துகின்றன. இங்கு வாகனத்தின் தயாரிப்பில் நாம் நடத்தும் ஒவ்வொரு புதுமையையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் மாணவர்களே...

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   பாஹா இந்தியா, மஹிந்திரா பாஹா, ATV போட்டி