நெடுஞ்சாலைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் மத்திய அரசு...
Posted Date : 11:35 (27/04/2018)
Last Updated : 11:42 (27/04/2018)
 
இந்தியாவின் வருவாயை உயர்த்துவதற்காக மத்திய அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் 100 தேசிய நெடுஞ்சாலைகளை, 30 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்போகிறார்கள். 
 
 தேசிய நெடுஞ்சாலை
 
இதற்கான ஏலம் கேட்கப்பட்டு யார் அதிக தொகை தருகிறார்களோ அவர்களுக்கு இந்தச் சாலைகள் லீசுக்கு விடப்படும். இதன் மூலம் ஒரு பெரும் தொகை மத்திய அரசின் கல்லாவுக்கு வந்துவிடும். Transfer concession agreement (ToT) என்று இதற்குப் பெயர். 9 நெடுஞ்சாலைக்கான முதல் ToT ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Macquarie எனும் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். 
 
நெடுஞ்சாலை/வெளிநாட்டு நிறுவனம்
ஒப்பந்தத்தின் படி இந்நிறுவனம் ரூ.9,681.5 கோடியை இன்னும் 120 நாள்களில் மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும். ஒப்பந்தத்தின் படி தோராயமாக 700 கி.மீ டோல் பாதையை இந்நிறுவனம் கையாளப்போகிறது. இந்தியாவுக்கு வந்த பெரிய வெளிநாட்டு முதலீடுகளில் இதுவும் ஒன்று. Macquarie நிறுவனம் லீஸ் எடுத்துள்ள நெடுஞ்சாலைகள் ஆந்திரா மற்றும் குஜராத் பகுதிகளில் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் கையில் நெடுஞ்சாலைகள் வரவிருப்பதால் இனியாவது சாலைகளில் உள்ள குண்டு குழிகள் எல்லாம் மறைந்து போகும் என்றும், டோல் கேட்டில் கூட்ட நெரிசல் குறைந்துபோகும் என்று நம்புவோம். டோல் விலைகள் குறையப்போவதில்லை, ஆனால் இந்நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எனும் நிலையில் இனியாவது நெடுஞ்சாலை அவலங்கள் குறையுமா என்று பார்ப்போம்...
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   நெடுஞ்சாலை துறை, நெடுஞ்சாலை வியாபாரம், டோல், சுங்கச் சாவடி