4 முதல் 5 லட்சம் விலை குறையப்போகிறது கவாஸகி ZX10R...
Posted Date : 17:12 (27/04/2018)
Last Updated : 17:12 (27/04/2018)

கடந்த ஆண்டே நின்ஜா 1000 பைக்ளை  SKD (semi knocked down) முறையில் கொண்டுவந்து இந்தியாவில் அசெம்பிள் செய்து முதல் முறையாக 1000சிசி பெர்ஃபார்மன்ஸ் பைக்கை ரூ.10 லட்சத்துக்குக் குறைவான விலைக்கு கொண்டுவந்த அதிரடிகாட்டியது கவாஸகி.

கவாஸகி நின்ஜா

இப்போது இந்நிறுவனத்தின் டிராக் பைக்கான  ZX10R-யும் இதே SKD முறையில் கொண்டுவந்து விற்பனைசெய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது 18 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படும்  ZX10R பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்தால் 4 முதல் 5 லட்சம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. டிராக்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சூப்பர்பைக்குகளின் ஆரம்ப விலையே 14 லட்சம்தான் (ஹோண்டா  CBR 1000RR) என்ற நிலையில் ஹோண்டாவை விட பலமடங்கு அதிக வேகம்கொண்ட நின்ஜாவின் விலை குறைந்தால் சூப்பர் பைக் விற்பனையில் பெரும் போட்டி நிலவும். 


கவாஸகி நின்ஜா ZX10R


புதிய முறையில் அசெம்பிள் செய்யப்படும் பைக்கை கவாஸகி, வரும் ஜுன் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே அதிவேகமான பைக்குகளில் ஒன்று  ZX10R. இதன் இன்-லைன் 4 சிலிண்டர் இன்ஜின் 200 bhp பவர் உருவாக்கக்கூடியது. 300 கி.மீ வேகம்வரை போகக்கூடிய இந்த பைக்கை பயன்படுத்தித்தான் உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப்பில் கடந்த மூன்றாண்டுகளாக சாம்பியனாக இருக்கிறார் ஜோனத்தன் ரே. கவாஸகி ZX10R-க்கு முதல் நிலை போட்டியாளராக இருக்கும் யமஹா R1 பைக்கின் விலை 20 லட்சத்துக்கு மேல் என்பதால் இந்த செக்மன்டை போட்டியின்றி வெற்றிபெற்றுவிடும் கவாஸகி.


- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   கவாஸகி ZX10R, நின்ஜா ZX10R