9.51 லட்சத்துக்கு வெளியானது டுகாட்டியின் மான்ஸ்டர் 821
Posted Date : 12:02 (02/05/2018)
Last Updated : 12:24 (02/05/2018)
 
 
டுகாட்டியின் புது மான்ஸ்டர் 821, ரூ. 9.51 லட்சம் எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. CBU வழியில் இந்தியாவில் விற்பனையாகும் இந்த பைக்கில் பிஎஸ் 4 இன்ஜின் மட்டுமல்ல டிசைன் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் உள்ளன. 
 
டுகாட்டி மான்ஸ்டர் 821
 
புதிய பைக்கிலும் அதே 821cc, 90 degree V-twin இன்ஜின்தான் என்றாலும், பிஎஸ் 4 விதிமுறைகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டுள்ளது. இதனால், 2bhp பவரும், 3.4Nm டார்க்கும் குறைந்துவிட்டது. தற்போது 110bhp பவரும், 86Nm டார்க்கும் வெளிப்படுத்துகிறது. கூட்டணியாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் புதிய பைக்கில் கூடுதலாக bi-directional quickshifter வந்துள்ளது.
 
 
 
புது மான்ஸ்டரின் பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் பகுதி முன்பை விட ஷார்ப்பாகவும், அடக்கமாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பழைய ஹெட்லைட் நீக்கப்பட்டு மான்ஸ்டர் 1200 பைக்கின் ஹெட்லைட்டுகள் வந்துவிட்டது. LCD இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு பதிலாக அதிக செயல்பாடுகளை கொண்ட TFT டிஸ்ப்ளே உள்ளது. பைக்கில் பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் தரத்தை அதிகரிக்க 8 level டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஆன்-ஆஃப் செய்யக்கூடிய ஏபிஎஸ், Urban, Touring மற்றும் Sport என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. 43mm USD ஃபோர்க் மற்றும் ப்ரீ-அட்ஜஸ்டபில் மோனோஷாக், சஸ்பென்ஷன் வேலைகளை பார்த்துக் கொள்கிறது. 
 
டுகாட்டி மான்ஸ்டர் 821
 
9.19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும்  டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிப்பிள் S மற்றும் ரூ.9.55 லட்சம் விலையில் விற்பனையாகும் யமஹா MT-09 பைக்குகளுடன் போட்டிபோடுகிறது மான்ஸ்டர் 821. GSX750 மற்றும் கவாஸகி நின்ஜா Z900 பைக்குகளும் போட்டியில் உள்ளன. அனால், இவை இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் இதன் விலை மான்ஸ்டர் பைக்கை விட 2 லட்சம் ரூபாய் வரை குறைவு. 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   டுகாட்டி மான்ஸ்டர் 821, டுகாட்டி, 821, மான்ஸ்டர், டுகாட்டி பைக்ஸ்