இந்தியாவில் அறிமுகமானது, இரண்டாம் தலைமுறை மினி கன்ட்ரிமேன்!
Posted Date : 20:02 (03/05/2018)
Last Updated : 20:07 (03/05/2018)


ஆடி Q3, பிஎம்டபிள்யூ X1, மெர்சிடீஸ் பென்ஸ் GLA ஆகிய காம்பேக்ட் லக்ஸூரி எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய கன்ட்ரிமேன் எஸ்யூவியைக் களமிறக்கியுள்ளது மினி. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த கார், 3 வேரியன்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இவற்றின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே, Cooper S (34.90 லட்சம் ரூபாய்), Cooper SD (37.40 லட்சம் ரூபாய்), Cooper S JCW Inspired (41.40 லட்சம் ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 
இரண்டாம் தலைமுறை மினி கன்ட்ரிமேன், முந்தைய மாடலைவிட சொகுசான, லக்ஸூரியான, பிராக்டிக்கலான எஸ்யூவியாக மாறியிருக்கிறது. மினி கார்களுக்கே உரிய ரெட்ரோ பாணி டிசைன் இங்கே தொடர்கிறது என்றாலும், சில வித்தியாசங்களும் தென்படுகின்றன. ஸ்டைலான கிரில், ஸ்போர்ட்டியான பம்பர்கள், அசத்தலான பாடி கிளாடிங் ஆகியவை இதற்கான உதாரணங்கள். 
 
 
 
 
பிஎம்டபிள்யூ X1 தயாரிக்கப்படும் அதே UKL ப்ளாட்ஃபார்மில்தான், இரண்டாம் தலைமுறை கன்ட்ரிமேன் காரைத் தயாரிக்கிறது மினி. எனவே அதில் இருக்கும் அதே 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.  Cooper S மற்றும் Cooper S JCW Inspired ஆகிய வேரியன்ட்களில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் TwinPower டர்போ பெட்ரோல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 192bhp பவர் மற்றும் 28kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதுவே Cooper SD வேரியன்ட்டில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 190bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 
 
 
 
 
சர்வதேச சந்தைகளில் இருக்கும் புதிய மினி கன்ட்ரிமேன், ALL4 எனும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வெளிவந்திருக்கும் மினி கன்ட்ரிமேன் கார், 2 வீல் டிரைவ் அமைப்புடனே வந்திருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல், லேட்டஸ்ட்  iDrive டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இருந்தாலும், மற்ற மினி கார்களைப் போலவே, இங்கும் பல சிறப்பம்சங்கள் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளன.
 
 
 
 
முன்பக்க Apron-ல் Air Ducts, 18 இன்ச் அலாய் வீல்கள், பின்பக்க ஸ்பாய்லர், ரியர் வியூ கேமரா, ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல், Harman Kardon சவுண்ட் சிஸ்டம், Heads Up டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், Stainless Steel பெடல்கள் ஆகியவை, Cooper S JCW Inspired வேரியன்ட்டில் ஆப்ஷனலாக இருக்கின்றன. தற்போது இந்தியாவில் எஸ்யூவி செக்மென்ட் டிரெண்டிங்கில் இருப்பதால், இரண்டாம் தலைமுறை மினி கன்ட்ரிமேன் கார், முந்தைய மாடலைப் போலவே விற்பனையில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 - ராகுல் சிவகுரு. 
 
 
TAGS :   MINI, COUNTRYMAN, INDIA, CHENNAI, 2018 DELHI AUTO EXPO, IDRIVE, ALL4, 2WD, 4WD, TWIN POWER TURBO, PETROL, DIESEL, 4 CYLINDER ENGINES, 8 SPEED AUTOMATIC GEARBOX, COOPER S, GLA, Q3.