ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன!
Posted Date : 11:29 (07/05/2018)
Last Updated : 12:08 (07/05/2018)


ஹூண்டாயின் வெற்றிபடைப்புகளில் கடைசியாக வெளியானது க்ரெட்டா. இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட க்ரெட்டாவின் 2018 ஃபோஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. விருப்பமுள்ளவர்கள் ரூ.25,000 செலுத்தி காரை முன்பதிவு செய்துகொள்ளலாம். கார், ஜூன், ஜூலை மாதங்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா

அமெரிக்க சந்தைக்காக முதன்முதலில் கொண்டுவரப்பட்டது க்ரெட்டா. இதன் ஃபேஸ்லிஃப்ட், தென் அமெரிக்காவில் விற்பனையாகும் காரின் ஸ்டைலை அப்படியே பெற்றுள்ளது. மாற்றங்களாக, பெரிய அறுங்கோண வடிவ க்ரில், அதைச் சுற்றி க்ரோம் நிறம் பூசப்பட்டுள்ளது, மெல்லிசான பனி விளக்குகள் பொருந்திய புதிய பம்பர், காரின் கொழுக்மொழுக் கண்ணம் போல இருக்கும் ஹெட்லைட்டுக்கும், பனி விளக்குக்கும் இடையில் உள்ள பகுதி என முன்பக்கத்தில் சில மாற்றங்கள் உள்ளன. 

ஹூண்டாய் க்ரெட்டா

காரின் பின்பக்கம் புதிதாக எல்ஈடி லைட்டுகள் வருகின்றன. பம்பர் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சன்ரூஃப் கூடுதலாக வருகிறது. விலை உயர்ந்த வேரியன்டில் டூயல் டோன் பெயின்ட் வரவாய்ப்புள்ளது. புதிய 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்ஸ் வருகிறது. இன்டீரியரை பொருத்தவரை கிரே நிற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. காரின் இன்ஜின் மற்றும் பர்ஃபார்மென்ஸில் மாற்றங்கள் இல்லை, 1.4 மற்றும்1.6 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் உள்ளன. 

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   ஹூண்டாய் க்ரெட்டா, ஃபேஸ்லிஃப்ட், எஸ்யூவி, creta facelift