டாடா நெக்ஸானில் AMT கியர்பாக்ஸ், சன்ரூஃப் ஆப்ஷன்!
Posted Date : 13:09 (07/05/2018)
Last Updated : 13:09 (07/05/2018)

 

டாடா நெக்ஸான் காரின் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.41 லட்சம் மற்றும் ரூ.10.3 லட்சம் என ஒரே வேரியன்டில் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலுமே AMT கூட்டணி தருவதால் நெக்ஸானின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ.11,000 கொடுத்து காரை முன்பதிவு செய்துகொள்ளலாம். 

 

டாடா நெக்ஸான்
 
 
ஆரஞ்சு மற்றும் சில்வர் டூயல் டோன் நிறம் மற்றும் காரில் பொருத்தப்பட்டிருக்கும்  XZA+ பேட்ஜ் தவிர வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. டாடாவின் 6 ஸ்பீடு  AMT கியர்பாக்ஸ், 110 bhp பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 110 bhp பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின்களோடு வருகிறது. இந்த AMT-யில் மேனுவல் மோடும் உள்ளது. கியர்பாக்ஸை மேனுவல் மோடில் செட் செய்தால் இன்ஜின் ஸ்போர்ட் மோடுக்கு வந்துவிடும். 
 
டாடா நெக்ஸான்
 
டாடா நெக்ஸானில் எகோ, சிட்டி, ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இதுதவிர  AMT காரில் மலைப்பாதையில் உதவும்  hill-assist மோடும் கடுமையான டிராஃபிக்கில் உதவும்  creep function மோடும் வருகின்றன. வசதிகளைப் பொருத்தவரை விலை உயர்ந்த  ZX+ வேரியன்ட்டில் ஆட்டோமெடிக் ஆப்ஷன் வருவதால் ப்ரொஜக்டர் ஹெட்லைட், 16 இன்ச் அலாய் வீல், 215/60 செக்‌ஷன் பெரிய டயர்கள், 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், என அனைத்து  வசதிகளும் வந்துவிடுகின்றன. 
 
டாடா நெக்ஸான்
 
 டாடா  AMT-யின் விலை மேனுவல் காரை விட ரூ.40,000 அதிகம்.  போட்டியாளரான எக்கோஸ்போர்ட்  Titanium+ AT வேரியன்டை விட நெக்ஸான்  AMT ரூ.1.96 லட்சம் விலை குறைவு என்பது பெரிய ப்ளஸ். காம்பாக்ட் எஸ்யூவி செக்மன்டில் டீசல் ஆட்டோமெடிக்  AMT உடன் வரும் முதல் கார் நெக்ஸான். எக்கோஸ்போர்டில்  AT கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது, விட்டாரா பிரெஸ்ஸாவில் டீசல்  AMT இன்னும் வரவில்லை, மஹிந்திரா நுவோஸ்போர்ட் பெரிய விற்பனையைத் தருவதில்லை என்பது நெக்ஸானுக்கு கூடுதல் ப்ளஸ். டாடா தற்போது புதிதாக சன்ரூஃப் ஆப்ஷனையும் தருகிறது. ரூ.16,000 எனும் கூடுதல் விலையில் காரில் சன்ரூஃப் பொருத்தி தருகிறார்கள்.
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   டாடா மோட்டார்ஸ், டாடா நெக்ஸான், நெக்ஸான் ஆட்டோமெடிக், Nexon AMT