ரூ.6.99 லட்சத்துக்கு வெளியானது ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட்
Posted Date : 15:32 (07/05/2018)
Last Updated : 15:37 (07/05/2018)
 
ஹூண்டாய் தனது ஐ20 ஆக்டிவ் க்ராஸ் ஓவர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டுள்ளது. பார்த்த உடனேயே தெரியும் முதல் மாற்றம் இதன் டூயல் டோன் பெயின்ட். நீலம்-வெள்ளை இரண்டு நிறமும் சேர்ந்து வருகிறது இந்த காரில்.ரேடியேட்டர் க்ரில்லில் சிறிய டிசைன் மாற்றம் உள்ளது. தற்போது உள்ள ஹூண்டாய் கார்களில் வரும்  cascade grille போன்று இல்லை.
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்
முன்பக்க பனி விளக்குகளில் சில்வர் ஃபினிஷ், காரின் டிக்கி கதவில் ரப்பர் ஸ்ட்ரிப் சேர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு தயாரிக்கப்படும் ஐ20 ஆக்டிவ் பேஸ்லிஃட்டி காரில் டெயில் லைட் மாற்றப்பட்டிருக்கும் ஆனால், இந்திய காரில் பழைய டெயில் லைட்தான் 
 
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்
 
காரின் உள்ளே greyscale தீம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்; ஏசி வென்ட், சீட், கியர் நாப் போன்ற இடங்களில் எல்லாம் நீல நிற பெயின்ட் வேலைப்பாடுகள் இன்டீரியரில் சில இடங்களைத் தனியாக எடுத்துக்காட்டுகிறது. சீட்டில் வரும் பேட்டர்ன்களும் புதுசு. மெக்கானிக்கலாக காரில் எந்த மாற்றமும் இல்லை.
 
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்
 
83 bhp பவர் தரக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியும், 90 bhp பவர் தரக்கூடிய 1.4 லிட்டர்  CRDI இன்ஜினும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியும் வருகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.99 லட்சம். ஐ20 ஆக்டிவ் இந்தியாவில் நல்ல விற்பனையில் இருக்கும் கார்தான் என்றாலும் சமீபத்தில் அதிக வசதிகளோடு இதைவிடக் குறைவான விலையில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் வெளியானது இந்த காரின் விற்பனையைப்  பாதிக்கும் விஷயம். ஃபேஸ்லிஃப்ட் மூலம் இந்த காரின் விற்பனையை தக்கவைத்துக் கொள்ளுமா ஹூண்டாய்?
 
 
- ரஞ்சித் ரூஸோ. 
TAGS :   ஹூண்டாய் ஐ20, ஆக்டிவ், ஃபேஸ்லிஃப்ட், ஐ20 ஆக்டிவ்