புது அப்டேட்டுடன் வரவுள்ளது மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா...
Posted Date : 16:47 (07/05/2018)
Last Updated : 16:50 (07/05/2018)
 
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் 2018 மாடல் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த காரின் ஸ்பை படங்கள் இணையதளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. புதிய நிறங்கள் மட்டுமல்லாமல் இந்த காரில் சில அப்டேட்டுகளும் வரவாய்ப்புள்ளது. 
 
 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா
 
ஆல்டோ, ஸ்விஃப்ட்டுக்கு பிறகு மாருதியின் அதிக விற்பனை பட்டியலில் இடம்பிடித்திருக்கும் கார்தான் விட்டாரா பிரெஸ்ஸா. இந்த காரில் வரும்  LDI (O) மற்றும் VDI (O) வேரியன்டுகளை நிறுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாம். இந்த வேரியன்டுகளில் ஏர்பேக் மற்றும் ABS மட்டுமே தனி அம்சமாக உள்ளதால், இதை நிறுத்திவிட்டு 2018 முதல் வேரியன்டிலும் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்கை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக டாப் வேரியன்டில் புதிய நிறங்களும், கறுப்பு நிற அலாய் வீல்களும் வரும். ஸ்பை படங்களில் அடர்த்தியான ஆரஞ்சு நிறம் வருகிறது இது பிரெஸ்ஸாவில் வரும் நீல நிறத்துக்கு பதிலாக வரவுள்ளது.
 
 
 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா
 
 
விலை உயர்ந்த வேரியன்டில் வரும் க்ரோம் க்ரில், க்ரோம் பூட் கார்னிஷ், கருப்பு அலாய் வீல்கள் இனி அனைத்து வேரியன்டிலும் வரலாம். ஸ்விஃப்ட் போன்று முழு கருப்பு இன்டீரியரும் வரவாய்ப்புள்ளது. 2018 மாடலில் அனைத்தும் வெளிப்புற அழகு மாற்றங்கள் மட்டுமே. இதன் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. 
 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   மாருதி சுஸூகி, விட்டாரா பிரெஸ்ஸா, மாருதி விட்டாரா, மாருதி எஸ்யூவி