விற்பனைக்கு வந்தது ஹோண்டா டியோவின் புதிய வேரியன்ட்...
Posted Date : 14:00 (08/05/2018)
Last Updated : 14:32 (08/05/2018)

ஹோண்டா டூ வீலர் இந்தியா தனது டியோ ஸ்கூட்டரின் புதிய டீலக்ஸ் மாடலை வெளியிட்டுள்ளது. டாப் வேரியன்டாக வெளிவந்திருக்கும் இந்த டீலக்ஸ் மாடல் பேஸ் வேரியன்டை விட ரூ.3000 அதிகம்.

ஹோண்டா டியோ

விலை குறைந்த பேஸ் வேரியன்டை விட டீலக்ஸ் வேரியன்டில்  LED ஹெட்லைட், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கிராஸியாவின் 4  in 1 Ignition Key, சீட்டை திறக்க தனியாக ஸ்விட்சு போன்ற வசதிகள் கூடுதலாக வருகிறது. டியோவில் முதல் முறையாக  USB மொபைல் சார்ஜர் வருகிறது. ஸ்டைலை பொருத்தவரை டீலக்ஸ் மாடலில் தங்க நிறத்தில் வீல்கள் வருகின்றன.  Marshal Green Metallic மற்றும்  Axis Grey Metallic எனப் புதிதாக இரண்டு நிறத்தில் டியோ வருகிறது. மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆக்டிவா 5ஜி-யில் இருக்கும் அதே 110சிசி இன்ஜின்தான். 7.8 bhp பவர் மற்றும் 8.9 Nm டார்க்கை உருவாக்குகிறது இந்த இன்ஜின். 130 mm டிரம் பிரேக்குடன்  CBS தொழில்நுட்பமும் டீலக்ஸ் வேரியன்டில் சேர்ந்து வருகிறது. 

ஹோண்டா டியோ

இளைஞர்கள் மத்தியில் டியோ நல்ல வரவேற்ப்பை பெற்ற ஸ்கூட்டர். கூடுதல் விலைக்கு ஏற்ப வசதிகளை அதிகமாகத் தந்துள்ளதால் இதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டியோ டீலக்ஸின் சென்னை ஆன்-ரோடு விலை ரூ.63,151. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், யமஹா ரே, சுஸுகி லெட்ஸ் மற்றும் டிவிஎஸ் வீகோ போன்ற ஸ்கூட்டர்களோடு போட்டிபோடுகிறது ஹோண்டா டியோ.

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   ஹோண்டா டியோ, டியோ டீலக்ஸ், ஹோண்டா ஸ்கூட்டர் 2018