52,686 ஸ்விஃப்ட் மற்றும் பெலினோ கார்களை ரீகால் செய்கிறது மாருதி சுஸூகி...
Posted Date : 15:25 (08/05/2018)
Last Updated : 11:23 (09/05/2018)

மாருதி சுஸூகி தனது நெக்ஸா வலைத்தளத்தில், 1 டிசம்பர் 2017-க்கு பிறகு, 16 மார்ச் 2018-க்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அணைத்து பெலினோ மற்றும் ஸ்விஃப்ட்டுகளுக்கு சர்வீஸ் கேம்ப் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த சர்வீஸ் கேம்ப் மே 14-ம் தேதி முதல் அனைத்து டீலர்களிலும் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
 
 
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

 
டிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 16, 2018 வரை தயாரிக்கப்பட்ட 52,686 ஸ்விஃப்ட் மற்றும் பெலினோ கார்களில் பிரேக்  வாக்யூம் ஹோஸ் பகுதியில் பழுது இருக்கலாம். அதனால், மே 14-ம் தேதிக்குப் பிறகு சர்வீஸ் சென்டருக்கு வந்து அந்த குறிப்பிட்ட பாகத்தைப் பரிசோதிக்க வேண்டும். தேவை என்றால் அந்தப் பாகத்தை இலவசமாக மாற்றித்தருவார்கள். 
 
மாருதி சுஸூகி

பழுது இருக்கலாம் எனச் சந்தேகம் இருக்கும் கார்களை டீலர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். உங்கள் ஸ்விஃப்ட் அல்லது பெலினோவுக்கு இந்த ரீகால் பொருந்துமா என்று இந்த லிங்க்கை பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம். இதற்கு சேஸி நம்பர் தேவை.
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், மாருதி பெலினோ, ஸ்விஃப்ட் ரீகால்