டட்ஸன் கோ மற்றும் கோ+ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெளியானது...
Posted Date : 11:22 (09/05/2018)
Last Updated : 11:22 (09/05/2018)

 

டட்ஸன் கோ மற்றும் கோ+ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தோனேசியாவில் வெளியிட்டுள்ளது நிஸான். இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் வரவுள்ளது. ஹேட்ச்பேக் மாடலான கோ மற்றும்  MPV மாடலான கோ+ இரண்டிலுமே நிஸானின் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் உள்ளது. இந்த இன்ஜின் 68 bhp பவர் மற்றும் 104 Nm டார்க்கை உருவாக்கக்கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது  CVT ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனோடு வருகிறது இந்த இன்ஜின். இந்தியாவுக்கு வரும்போது  CVT கிடையது அதற்குப் பதிலாக  AMT மாடல்தான். கோ+ காரில் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கிடையாது. 

டட்ஸன் கோ


ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்பக்க பம்பர் மற்றும் ஹெட்லைட்டுகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இது, சமீபத்தில் வெளியான ரெடிகோ க்ராஸ் கார்களில் இருப்பது போலவே உள்ளது. பனி விளக்குகளுக்குப் பதிலாக  LED DRL உள்ளது. க்ரில் இன்னும் கொஞ்சம் அகலம் கூட்டப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல்கள் வருகின்றன. இன்டிகேட்டர்கள் இப்போது ரியர் வியூ மிரருடன் சேர்ந்து விட்டன. இந்த கார்களோடு கூடுதலாக பாடி கிட்டும் விற்பனைக்கு உள்ளது. இதில் ஸ்போர்ட்டியான பம்பர்கள், பெரிய ஸ்பாய்லர், சைடு ஸ்கர்ட் போன்றவை வருகின்றன.
 
டட்ஸன் கோ+

காரின் உள்பகுதியில் ஸ்மாட்ஃபோன் கனெக்டிவிட்டியுடன் கூடிய  6.75 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிதாக வந்துள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் ஏசி வென்ட்டுகளின் ஸ்டைல் ரெடிகோ க்ராஸ் கார்களில் உள்ளது போல மாற்றப்பட்டுள்ளன. ஆட்டோமெடிக் ஹெட்லைட், பவர் வின்டோ, டிரைவர் ஏர்போக் இரண்டு காரிலும் ஸ்டான்டர்டாக வருகின்றன. 2018 முடிவதற்குள் இந்த கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   டட்ஸன் கோ, டட்ஸன் கோ+, நிஸான், ரெடிகோ, Datsun Go