ரூ.8.54 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது விட்டாரா பிரெஸ்ஸா AMT
Posted Date : 13:02 (09/05/2018)
Last Updated : 13:13 (09/05/2018)
 
மாருதி சுஸூகியின் எஸ்யூவியான விட்டாரா பிரெஸ்ஸாவின்  AMT கியர்பாக்ஸ் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.8.54 லட்சத்துக்கு  VDI, ரூ.9.31 லட்சத்தில்  ZDI மற்றும் ரூ.10.27 லட்சத்தில்  ZDI+ மற்றும் ரூ.10.49 லட்சத்துக்கு  ZDI டூயல் டோன் பெயின்ட் என நான்கு வேரியன்டுகளில் வருகின்றது விட்டாரா பிரெஸ்ஸா  AMT. 
 
 
விட்டாரா பிரெஸ்ஸா
 
 
கியர்பாக்ஸ் மாற்றம் மட்டுமில்லாமல் காரின் ஸ்டைலும் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட்டை போல முழு பிளாக் இன்டீரியர்கள், க்ளாஸ் பிளாக் அலாய் வீல், நீல நிறத்துக்குப் பதிலாக புதிதாக  Autumn Orange நிறம் என சில ஸ்டைல் மாற்றங்கள் நடந்துள்ளது. இதைத் தவிர முன் பக்கம் இரண்டு ஏப்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார்,  ABS, EBD மற்றும்  high speed alert வசதி ஆட்டோமெடிக் காரில் ஸ்டான்டர்டாக தரப்படுகிறது. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 89 bhp பவர் மற்றும் 200 Nm டார்க் தரக்கூடிய 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான். 
 
 
விட்டாரா பிரெஸ்ஸா ஆட்டோமெடிக்
 
 
பேஸ் வேரியன்டை தவிர அணைத்து வேரியன்டிலும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தந்துள்ளது மாருதி. இதனால் நெக்ஸானை விட பிரெஸ்ஸாவின் ஆட்டோமெடிக் வேரியன்ட் விலை குறைவானதாக உள்ளது. பிரெஸ்ஸாவின் டாப் வேரியன்டான  ZDi+ AMT வேரியன்டை விட நெக்ஸான் டாப் வேரியன்ட்  AMT XZA+ விலை ரூ.10,000 அதிகம். 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   மாருதி சுஸூகி, விட்டாரா பிரெஸ்ஸா, ஆட்டோமெடிக், மாருதி AMT, Vitara Brezza automatic