டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் அறிமுகம்...
Posted Date : 17:05 (09/05/2018)
Last Updated : 17:10 (09/05/2018)
 
டிவிஎஸ் தனது அப்பாச்சி  RTR 180 பைக்கின் ரேஸ் எடஷன் எனும் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.  Pearl White நிறத்தில் ஸ்போர்ட்டியான கிராஃபிக்ஸ் உடன் வரும் இந்த பைக் டிவிஎஸ்ஸின்  racing carbon fibre எனும் தீமில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். 
அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிஷன்
புதிய நிறம், கிராஃபிக்ஸ் தவிர்த்து டேங்க்கின் மேல் அப்பாச்சி என்றிருந்த இடத்தில் இப்போது டிவிஎஸ்ஸின் குதிரை லோகோ பதிந்துள்ளது. பைக்கின் பின்புறம், இன்ஜின் கார்டு மற்றும் வீல் மீது அப்பாச்சி 200 பைக்குகளை போல டிவிஎஸ் ரேஸிங் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 0-60 கி.மீ வேகம், லேப் டைமர், சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற வசதிகள் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இந்த பைக்கில் வருகிறது. பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. 16.4 bhp பவர் மற்றும் 15.5 Nm டார்க் தரக்கூடிய 177.4 cc சிங்கள் சிலிண்டர் இன்ஜின் இதில் உள்ளது. இந்த வேரியன்டில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள் ஸ்டாண்டர்டாக வருகிறது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.83,825. சாதாரன அப்பாச்சி RTR 1600-யை விட ரூ.550 அதிகம். 
 
அப்பாச்சி RTR180 ரேஸ் எடிஷன்
 
கடந்த சில மாதங்களில் மட்டுமே டிவிஎஸ் அப்பாச்சி  RTR 160 மற்றும்  RR 310 என இரண்டு பைக்குகளையும், என்டார்க் என்ற ஸ்கூட்டரையும்  வெளியிட்டு விற்பனை இலக்கைக் குறிவைத்து வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பைக்குகள் மட்டுமில்லாமல் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன்கூடிய  RTR 200 ரேஸ் எடிஷன், சாதாரண  RTR200 பைக்கில் புதிய நிறங்கள்,  RTR 160 ஸ்பெஷல் எடிஷன் என முந்தைய பைக்குகளையும் அப்டேட் செய்து கொண்டிருக்கிறது. 
TAGS :   அப்பாச்சி RTR 180, அப்பாச்சி ரேஸ் எடிஷன், புது அப்பாச்சி வேரியன்ட்