டஸ்டர், எக்கோஸ்போர்ட்டை முந்திய மஹிந்திரா ஸ்கார்பியோ!
Posted Date : 12:37 (19/05/2014)
Last Updated : 12:16 (20/05/2014)

விற்பனைக்குவந்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் மக்களின் ஃபேவரைட் எஸ்யூவியாக இருக்கிறது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ.

 

மஹிந்திரா வெளியிட்டிருக்கும் அறிக்கைபடி கடந்த நிதியாண்டில் விற்ற மொத்த ஸ்கார்பியோக்களின் எண்ணிக்கை, ஹிட் எஸ்யூவிக்களான டஸ்டர் மற்றும் எக்கோஸ்போர்ட்டைவிட அதிகம். கடந்த மார்ச் மாதம் மட்டும் 5,605 ஸ்கார்பியோக்களை விற்றுள்ளது மஹிந்திரா. இதுதான் அந்த செக்மென்ட்டிலியே அதிகம். கடந்த நிதியாண்டில் சுமார் 46,700 டஸ்டர் கார்களும், சுமார் 45,000 எக்கோஸ்போர்ட் கார்களும் விற்றிருக்கின்றன. ஆனால், இதே சமயத்தில் 50,900 ஸ்கார்பியோக்கள் விற்கப்பட்டுள்ளன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது மஹிந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட்.

TAGS :   mahindra scorpio sales