அடுத்த தலைமுறை மஹிந்திரா மேக்ஸிமோ(P601)?

சென்னை அருகே டெஸ்ட் செய்யப்பட்டுவந்த மஹிந்திரா நிறுவனத்தின் புதிய LCV ஒன்றை படம்பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் புகைப்படக்காரர் பா.ஜெயவேல்.

இது மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்தத் தலைமுறை மேக்ஸிமோ மாடலாகவோ அல்லது மேக்ஸிமோவுக்கும், ஜியோவுக்கும் நடுவில் அறிமுகமாக இருக்கும் புத்தம் புதிய LCV வாகனமாகவோ இருக்கலாம்! ரூ. 4,000 கோடி முதலீட்டில் திருவண்ணாமலை அருகே செய்யாறில் தயாராகிவரும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில்தான் இந்த LCV தயாரிக்கப்படும். இந்த புதிய தொழிற்சாலை அடுத்த வருடம் இறுதியில் இருந்து செயல்படத் துவங்கும்!