புதிய ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா 2015-ல் விற்பனைக்கு வருகிறது!
Posted Date : 12:51 (19/05/2014)
Last Updated : 12:16 (20/05/2014)

புதிய ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா 2015-ல் விற்பனைக்கு வருகிறது!

சமீபத்தில் அறிமுகமாகியுள்ள புதிய ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா ஃபேஸ்லிஃப்ட், அடுத்த வருடம் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

 

பழைய ஜெட்டாவுக்கும், புதிய மாடலுக்கும் டிசைனில் குறிப்பிடத்தகுந்த மாற்றஙகள் உள்ளன. காரின் முன்பக்கம், பஸாத் காரைப் போலவே இருக்கிறது. இந்த டிசைன் மாற்றம் ஏரோடைனமிக்ஸ்-காகவும் செய்யப்பட்டுள்ளது. காரின் உள்பக்கமும் முன்னைவிட ஃப்ரெஷ்ஷாக காட்சியளிக்கிறது. ஸ்டீயரிங், ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் காரில் இருந்த அதே டிசைன்தான். ஃபோக்ஸ்வாகனின் லேட்டஸ்ட் தலைமுறை EA288 2.0 TDI  இன்ஜினுடன் அறிமுகமாகியிருக்கிறது 2015 ஜெட்டா. பழைய இன்ஜினைவிட 10 bhp கூடுதல் சக்தியை அளிக்கிறது இது. அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகும்போது விலையில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

TAGS :   volkswagen jetta