விரைவில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டு சீனாவில் அறிமுகம்!
Posted Date : 12:57 (19/05/2014)
Last Updated : 12:15 (20/05/2014)

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உலகின் நம்பர் 1 கார் தயாரிப்பாளராகும் நோக்கத்தில் தீவிரமாக இருக்கிறது. பட்ஜெட் பிராண்டுகளை அறிமுகப்படுத்துவதன்மூலம் புதிய சந்தைகளில் வெற்றிபெற முடியும் என்பதை ரெனோ மற்றும் நிஸான் நிறுவனங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் கடந்த வருடத்தில் இருந்தே பட்ஜெட் பிராண்டை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் இருந்தது. ஆனால், கடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் ஃபோக்ஸ்வாகனின் பிராண்டு டெவெலப்மென்ட் அதிகாரி, புதிய பிராண்டு அறிமுகப்படுத்துவதற்கான் செலவு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் பிராண்டுக்குக்கீழ் வரும் கார்களின் டிசைன் கான்செப்ட்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டதாக தகவலகள் வெளியாகியிருக்கின்றன. சீனாதான் இந்த பிராண்டு அறிமுகமாக இருக்கும் முதல் சந்தை. சீனாவில்தான் முதல் காருக்கான அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட இருக்கிறதாம். இந்திய மதிப்பில் ரூ. 5 முதல் 7 லட்சத்துக்குள் விலை கொண்ட கார்களை இந்த புதிய பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்த இருக்கிறதாம் ஃபோக்ஸ்வாகன். 

ஜெர்மன் பத்திரிகைகள் இந்த புதிய பிராண்டின் பெயர் 'Tantus' என்று இருக்கலாம் என்று கூறுகின்றன. இந்தியாவில் நிஸானின் டட்ஸன் பிராண்டு வெற்றிபெற்றால், ஃபோக்ஸ்வாகன் தன்னுடைய பட்ஜெட் பிராண்டை இங்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

TAGS :   volkswagen