அறிமுகமானது 2015 வால்வோ XC90 காரின் இன்டீரியர்ஸ்!
Posted Date : 19:01 (27/05/2014)
Last Updated : 19:56 (29/05/2014)

                           

 

அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றான வால்வோ-ன் 2015 XC90 எஸ்யுவி காரின் இன்டீரியர் படங்களை வெளியிட்டது வால்வோ நிறுவனம். இந்த எஸ்யுவி அறிமுகப்படுத்தப்பட்டு 12 வருடங்கள் கழித்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இன்டீரியரைப் பொறுத்துவரை இதுவரை வால்வோ உருவாக்கியதிலேயே மிகவும் சொகுசான இன்டீரியர் இதுதானாம்.

7-சீட்டர் காரான XC90-ன் சென்டர் கன்சோலில் ஏகப்பட்ட பட்டன்களை வைத்து நிரப்பாமல், டெஸ்லா மாடல் S காரைப்போல் ஒரே ஒரு டச்ஸ்க்ரீனை மட்டும் வைத்துவிட்டு, அனைத்து கன்ட்ரோல்களையும் அதிலேயே கொடுத்துவிட்டது வால்வோ. இதன் ஸ்டைலான கியர்லீவரைத் தயாரித்திருப்பது, ஸ்வீடன் நாட்டின் Orrefors கண்ணாடி தயாரிப்பு நிறுவனம். காரில் உள்ள வால்யூம், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்கள் அனைத்தும் வைரத்தால் பட்டைதீட்டப்பட்டவை. 4-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதியும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் 'CarPlay' தொழில்நுட்பம்தான் இன்ஃபோடெய்ன்மென்ட் வேலைகளை கவனிக்கப்போகிறது.


 

காரின் இன்டீரியரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மரவேலைப்பாடுகளையும், தோல் வேலைப்பாடுகளையும் பார்க்கும்போது கலையுணர்ச்சி மிளிருகிறது. 2015-ஆம் ஆண்டின் மத்தியில் 2015 வால்வோ XC90 கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்!

 

TAGS :   Volvo, Motor Vikatan, XC90, SUV