இதுதான் 2014 ஸ்கோடா ஃபேபியா
Posted Date : 19:54 (29/05/2014)
Last Updated : 19:54 (29/05/2014)

                          

 

 

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமாக இருந்த 2014 ஸ்கோடா ஃபேபியா கார்-ன் முழுமையான தோற்றத்தை நம்மால் இப்போதே பார்க்கமுடியும். ஸ்கோடா நிறுவனம் இருக்கும் செக் குடியரசு நாட்டில் புதிய ஃபேபியா சோதனை ஓட்டத்தில் இருந்தபோது புகைப்படம் எடுத்துவிட்டார்கள். புதிய ஃபேபியா பார்ப்பதற்கு அகலமாகவும், முன்னைவிட சிக்கென்ற ஸ்டைலிங் கொண்டதாகவும் இருக்கிறது. க்ரில்லும் லேட்டஸ்ட் ஸ்கோடா கார்களைப் போல மாற்றப்பட்டுவிட்டது. காரின் பக்கவாட்டிலும், பின்பக்கமும் முக்கிய இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், இந்த படத்தைவைத்து காரின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் எடைபோட முடியாது.

 

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MQB கட்டுமானத்தில் புதிய ஃபேபியா உருவாக்கப்படவில்லை. விலையைக் குறைக்கவேண்டும் என்பதால்தான் இந்த முடிவாம். இன்ஜின்களைப் பொறுத்தவரை, ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் இன்ஜின்களைத்தான் ஃபேபியாவிலும் அளிக்க இருப்பதாக சொல்கிறார்கள். 

படம் உதவி: ஆட்டோஎவொல்யூஷன் 

 

 

TAGS :   Skoda, Fabia, Spyshots