சென்னையில் ஜிடி அகாடமி ப்ளே ஸ்டேஷனைத் துவக்கியது நிஸான்!
Posted Date : 14:22 (05/06/2014)
Last Updated : 14:30 (05/06/2014)

 

 


கார் ரேஸ் பயிற்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நிஸானின் ஜிடி அகாடமி ப்ளே ஸ்டேஷன் சென்னையில் துவங்கியிருக்கிறது. ரியல் ரேஸ் போன்றே சிமுலேட்டர் தொழில்நுட்பத்துடன் நடைபெற இருக்கும் இந்த ப்ளே ஸ்டேஷன் விளையாட்டை நிஸான் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் ஜூன் 5 முதல் 8-ஆம் தேதிவரை நடத்துகிறது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில் இப்போது நடைபெறுகிறது. கார் ரேஸ் வீரர்களாக விரும்பும்பவர்களுக்கான முதல்படி இந்த சிமுலேட்டர் ரேஸ் பயிற்சிதான் என்பதால் இதில் கலந்துகொள்ளவே ரேஸ் லைசென்ஸ் எடுக்க வேண்டும்.

சென்னைப் போட்டியில் வெற்றிபெறுபவர் மும்பையில் நடைபெற இருக்கும் அகில இந்திய ப்ளே ஸ்டேஷன் ரேஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதிப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 28 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். இதில் முதல் ஆறு இடங்களைப் பிடிப்பவர்கள் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ரேஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச ரேஸ் கேம்ப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெறுவார்கள்.

மேலும் தகவல்கள் நிஸான் இணையதளத்தில் www.nissan.in

படங்கள் : வீ. நாகமணி
 

TAGS :