இந்தியாவில் விற்பனைக்கு வந்தது 2014 மெர்சிடிஸ் பென்ஸ் S 350 CDI - விலை ரூ. 1.07 கோடி
Posted Date : 15:23 (05/06/2014)
Last Updated : 19:05 (07/06/2014)

                     2014 Mercedes Benz S Class S350 CDI Launch - Motor Vikatan

2014 மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மாடல்களின் வரிசையில் டீசல் இன்ஜின் கொண்ட S350 CDI மாடல் இன்று புனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சென்டர் ஆஃப் எக்ஸெலன்ஸ்-ல் அறிமுகமானது.  S350 CDI மாடலில் 258 bhp சக்தியை 3,600 ஆர்பிஎம்மில் அளிக்கும் 3.0 லிட்டர் V6 டீசல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 620 Nm டார்க்கை 1,600 முதல் 2,400 ஆர்பிஎம் வரை அளிக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸின் பிரபல கியர்பாக்ஸான 7G Tronic Plus 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்தான் இந்தக் காரில் உள்ளது. புனேவில் உள்ள பென்ஸ் தொழிற்சாலையிலேயே CKD முறையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்கப்பட இருக்கிறது S350 CDI.ஆனால், காரின் பாடியை மட்டும் இந்தியாவிலேயே உருவாக்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ். 
 
S500 பெட்ரோல் மாடலுக்கும், இந்த டீசல் மாடலுக்கும் வெளிப்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், காரின் உள்ளே பெட்ரோல் மாடலில் இருந்த பல வசதிகளை டீசல் மாடலில் கொடுக்கவில்லை. பின்பக்கம் பெஞ்ச் டைப் இருக்கைகள்தான்(S500-ல் பின்பக்கம் தனி இருக்கைகள்). மேலும், டீசல் மாடலில் 18-இஞ்ச் வீல்களைத்தான் கொடுத்துள்ளது பென்ஸ். ஆனால், ஆக்டிவ் பாடி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, நைட்-வியூ அஸிஸ்ட் ப்ளஸ், Airmatic ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 8 காற்றுப்பைகள், டைனமிக் கார்னரிங் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.
 
S350 CDI டீசல் மாடலில் உள்ளதுபோலவே இதன் போட்டி கார்களான ஆடி A8 3.0L, பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் 730 Ld, ஜாகுவார் XJ 3.0L போன்றவற்றின் டீசல் மாடல்களிலும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் இன்ஜின்கள்தான் உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் S500 V8 பெட்ரோல் மாடல் ரூ. 1.36 கோடி-க்கு(எக்ஸ்-ஷோரூம் மும்பை) விற்கப்பட, S350 CDI டீசல் மாடல் 1.07 கோடி ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம் புனே) விற்பனைக்கு வந்துள்ளது. 
 
2014 மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் S350 CDI 
 
விலை: ரூ. 1.07 கோடி  (எக்ஸ்-ஷோரூம் புனே) 
இன்ஜின்: 2987 cc, V6 டீசல் 
சக்தி: 258 bhp @  3,600 rom
டார்க்:  620 Nm (1,600 - 2,400 rpm)
கியர்பாக்ஸ்/டிரைவ்: 7G Tronic Plus 7-Speed Dual Clutch Transmission
 
TAGS :   Mercedes Benz, 2014 S Class Diesel, S350 CDI, pune