பாதுகாப்பு குறைந்தவையா குவாட்ரிசைக்கிள்கள்?(Quadricycles) - Euro NCAP பரிசோதனை முடிவுகள் தந்த அதிர்ச்சி!
Posted Date : 16:46 (06/06/2014)
Last Updated : 16:51 (06/06/2014)

                         Euro NCAP - Motor Vikatan - Crash Test

                                                                                        (Tazzari ZERO)

பயன்படுத்தவும், இயக்கவும் வசதியான வாகனம் குவாட்ரிசைக்கிள். எடை குறைவாக, நான்கு சக்கரங்களுடன் பார்ப்பதற்கு ஒரு சிறிய கார் போலத்தோற்றமளிக்கும். குவாட்ரிசைக்கிள்களை ஐரோப்பிய விதிகளின்படி இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். இதில் 'லைட் குவாட்ரிசைக்கிள்'-களின் எடை 350 கிலோவுக்கு குறைவாகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீக்கு குறைவாகவும் இருக்கும். 'ஹெவி குவாட்ரிசைக்கிள்'-களின் எடை 350 கிலோவுக்கு மேலும், ஸ்பீடு 'லிமிட்' இல்லாமலும் இருக்கும். சில, குவாட்ரிசைக்கிள்களின் டாப் ஸ்பீடு மிகவும் குறைவாக இருந்தாலும், எடை 350 கிமீக்கு மேல் இருந்தால், அவை  'ஹெவி' வகையில்தான் அடங்கும். 
 
 
Euro NCAP - Motor Vikatan - Crash Test 1 Euro NCAP - Motor Vikatan - Crash Test 1 ஐரோப்பிய விதிகளின்படி  குவாட்ரிசைக்கிள்களுக்கு  கார்களைப் போல் பாதுகாப்பு சோதனைகளை பாஸ்  செய்யத்தேவையில்லை. இவற்றை பொதுச்சாலைகளில்  ஓட்டலாம். மேலும், இவற்றை ஓட்டுவதற்கு லைசென்ஸ்  தேவையில்லை.கிட்டத்தட்ட ஒரு சிறிய கார் அளவுக்கு  பயன்களை அளிப்பதால் மக்கள் இவற்றை கார் போல  பயன்படுத்தக்கூடும் என யூகித்த Euro NCAP(European New Car  Assessment Programme) அமைப்பு, இவற்றின் பாதுகாப்பு பற்றி  ஆராய முடிவெடுத்தது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது  ரெனோ ட்விஸி 80(Renault Twizy), டஸரி ஜீரோ(Tazzari  ZERO),Ligier IXO J LINE 4 Places மற்றும் கிளப் கார் வில்லேஜர் ஆகிய நான்கு ஹெவி குவாட்ரிசைக்கிள்கள். Euro NCAP வழக்கமாக கார்களுக்கு செய்யும் சோதனைகளைவிட வித்தியாசமான முறைகளை இங்கு கையாண்டிருக்கிறது. இந்த க்ராஷ் டெஸ்ட் முடிவுகளை மற்ற கார்களுக்கான சோதனை முடிவுகளுடன் ஒப்பிடக்கூடாது என Euro NCAP தெரிவித்துள்ளது. (படம்: Ligier IXO J LINE 4 Places)
 
 
 
                             
                                                           (Renault Twizy 80)                                                      (Tazzari Zero)
 
சோதனை முடிவுகளின்படி, இந்த 4 குவாட்ரிசைக்கிள்களுமே மிகவும் மோசமாகவே சேதமடைவதாகவும், சிலவற்றில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது இந்த அமைப்பு. க்ராஷ் டெஸ்ட் டம்மிகளை ஆராய்ந்தபின்னர்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது Euro NCAP. இந்த நான்கு வாகனங்களில் காற்றுப்பையுடன் விற்பனையில் இருப்பது ரெனோ ட்விஸிதான். ஆனாலும், ட்விஸியின் இறுக்கமான கட்டுமானத்தின் காரணமாக க்ராஷ் டெஸ்ட் டம்மி சேதம் சற்று அதிகமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளது. 
 
                                                         
                                                                                        (Clubcar Villager) 
 
Euro NCAP மதிப்பெண் பட்டியல்:
 
Tazzari Zero - 4.0/16
Renault Twizy 80 - 6.0/16
Ligier IXO J LINE 4 Places - 2.0/16
Clubcar Villager - 2.0/16
 
இந்த நான்கு குவாட்ரிசைக்கிள்களின் க்ராஷ் டெஸ்ட் வீடியோக்களை EuroNCAP--ன் யூடியூப் சேனலில் பார்க்கலாம். 

 

TAGS :   Euro NCAP,Quadricycles, unsafe