சென்னையில் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் பைக்குகள் அறிமுகம்! - விலைகள் ரூ. 6.55 லட்சம் முதல்!
Posted Date : 18:22 (07/06/2014)
Last Updated : 19:11 (07/06/2014)

                            

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க..

உலகின் மிகப் பிரபலமான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று, ட்ரையம்ப். இது, தற்போது சென்னையில் தனது விற்பனை மையத்தை துவக்கியுள்ளது. சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ’ஹார்பர் சிட்டி மோட்டார்ஸ்’ டீலர்ஷிப்பில் ட்ரையம்ப் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

 
கிளாஸிக், ரோட்ஸ்டர், சூப்பர்ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர், க்ரூஸர்  ஆகிய ஐந்து வகையில், 11 பைக்குகளை ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இவற்றின் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 23 லட்சம் வரை நீள்கிறது. இந்த ஐந்து செக்மென்ட்டிலும் பைக்குகளை விற்பனை செய்யும் ஒரே மோட்டார்சைக்கிள் நிறுவனம் 'ட்ரையம்ப்'தான் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அட்வென்ச்சர் மற்றும் க்ரூஸர் வகை மட்டும், இந்தியாவில் முழுமையாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற மூன்று வகை பைக்குகளும் CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. 
 
(விலைகள் அனைத்தும் சென்னை ஆன் - ரோடு) 
 
கிளாஸிக்:
 
                                 
           போனெவில் - ரூ. 6.55 லட்சம்                                                      போனெவில் T100 - ரூ. 7.55 லட்சம்
                                                       
                                                                         த்ரக்ஸ்டன் - ரூ. 7.66 லட்சம்
 
ரோட்ஸ்டர்
  
                           
       ஸ்ட்ரீட் ட்ரிபிள் ABS - ரூ. 8.54 லட்சம்                                  ஸ்பீட் ட்ரிபிள் ABS - ரூ. 11.94 லட்சம்
 
சூப்பர் ஸ்போர்ட்ஸ்
 
                                   
டேடோனா 675 ABS - ரூ. 11.58 லட்சம்                                           டேடோனா 675 R ABS - ரூ. 13.06 லட்சம்
 
அட்வென்ச்சர்
 
                                         
டைகர் 800 எக்ஸ்ப்ளோரர் ABS - ரூ. 13.69 லட்சம்             எக்ஸ்ப்ளோரர் XC ABS (ஸ்போக்) - ரூ. 20.68 லட்சம்
 
க்ரூஸர்
 
                                           
தண்டர்பேர்டு ஸ்டார்ம் - ரூ. 15.01 லட்சம்                                    ராக்கெட் III ரோட்ஸ்டர் ABS  - ரூ. 22.99 லட்சம்
TAGS :   Triumph chennai dealership, Triumph Chennai on road prices, chennai, triumph, bonneville