இதுதான் 2015 ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் !
Posted Date : 13:40 (09/06/2014)
Last Updated : 14:09 (09/06/2014)

                              

 
அடுத்த தலைமுறை ஃபோர்டு ஃபிகோ தயாராகிவிட்டது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கான்செப்ட் மாடலாக அறிமுகமான ஃபோர்டு கா, காரின் தயாரிப்பு மாடல் புகைப்படங்கள் தற்போது ஃபோர்டு பிரேசில் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதே டிசைனைக்கொண்டுதான் 2015 ஃபோர்டு ஃபிகோ இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
 
 
 
 ஃபோர்டு கா காருக்கான மைலேஜ் சோதனைகள் ஏற்கனவே பிரேசிலில் முடிந்துவிட்ட நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. 
 
 
 
 
 
முதலில், ஒரே ஒரு 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டும் விற்பனைக்கு வர உள்ளது ஃபோர்டு கா ஹேட்ச்பேக். இந்த இன்ஜின் 85 bhp சக்தியையும் 10.7 kgm டார்க்கையும் அளிக்கிறது. சோதனைகளில் அதிக மைலேஜை அளித்ததாம் இந்த இன்ஜின். ஏற்கனவே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைகளுக்காக ஃபோர்டு கா ப்ரோட்டோடைப்கள் இந்தியாவை வந்தடைந்துவிட்டன.

புதிய ஃபிகோ அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இதன் செடான் மாடல் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
TAGS :   Ford Figo 2015, Ford Ka