அடுத்த தலைமுறை U301 மஹிந்திரா பொலெரோ கார் சென்னை அருகே தற்போது தீவிர சோதனையில் இருக்கிறது.

  

4 மீட்டர்களுக்குள், 4 மீட்டர்களுக்கு மேல் என இரண்டு விதமான மாடல்களில் அடுத்த தலைமுறை பொலெரோ விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. ஸ்பை படங்களை வைத்துப்பார்க்கும்போது இந்த ப்ரோட்டோடைப்பில் முன்பக்க க்ரில் பார்ப்பதற்கு மஹிந்திரா XUV500 காரைப்போலவே இருக்கிறது. இதற்குமுன் இணையத்தில் வெளியான ஸ்பை படங்களில் பின்பக்கம் ஸ்பேர் வீல் மாட்டப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஸ்பை படங்களில் ஸ்பேர் வீல் இல்லாததால் காரின் உண்மையான பின்பக்க தோற்றமும், நீளமும் புலப்படுகிறது. பின்பக்க டெயில்கேட்டில் உள்ள கண்ணாடி சிறியதாக உள்ளது. 
 
  
 
இந்த ஸ்பை படங்களில் வெளியான முக்கிய அம்சம், ப்ரோட்டோடைப்பில் பொருத்தப்பட்டுள்ள 2-DIN வகை ஸ்டீரியோ சிஸ்டம். காருடைய ஸ்டீயரிங் வீலும் புதிய டிசைனில் இருக்கிறது. 
 
சமீபத்தில், மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பவன் கோயங்கா அளித்த பேட்டியில் ''மஹிந்திராவிடம் 2025-ஆம் ஆண்டு வரைக்குமான திட்டங்கள் தயாராக உள்ளது" என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, 3 புதிய பிளாட்ஃபார்ம்களை உருவாக்கிவருகிறது மஹிந்திரா. இதில் ஒன்று விவசாய வாகனத்துக்கானது. மற்ற இரண்டில் ஒன்று 'U301' 2016 மஹிந்திரா பொலெரோ, இன்னொன்று S101 மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவி. 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது 'U301' 2016 மஹிந்திரா பொலெரோ.
 
படங்கள்: ஜெயவேல்