ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது டட்ஸன் கோ!
Posted Date : 11:46 (11/06/2014)
Last Updated : 16:13 (11/06/2014)

நிஸானின் பட்ஜெட் பிராண்டான டட்ஸனின் கோ விற்பனைக்கு வந்து மூன்று மாதங்கள் முடியப்போகிறது. மாதத்திற்கு இந்தியா முழுக்க 2000 கோ கார்களை விற்பனை செய்துவரும் நிஸான், கோ-வில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை விற்பனைக்கு கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பான் ஆட்டோமேட்டிக் கம்பெனி(JATCO) நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் நிஸான், கோ காருக்கான பட்ஜெட் ஆட்டோமேட்டிக் கியார்பாக்ஸைத் தயாரித்துவருகிறது. இந்த கியர்பாக்ஸ் தயாரிப்புப் பணிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற்றுவதால் விலைக்குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


 

TAGS :