முதல் இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் டிசையர்....ஆல்ட்டோவுக்கு மூன்றாவது இடம்!
Posted Date : 15:43 (12/06/2014)
Last Updated : 15:43 (12/06/2014)

மே மாத டாப் டென் கார்கள் விபரம்!

மே மாத டாப் டென் கார்கள் விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். மே மாதம் இந்தியா முழுக்க 18,953 ஸ்விஃப்ட் டிசையர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஸ்விஃப்ட் இரண்டாம் இடம் பிடிக்க, எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆல்ட்டோ மூன்றாவது இடத்துக்குப் பின் தங்கியிருக்கிறது. ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 9,317 கார்கள் விற்பனையாகி ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது. இயான், ஆம்னி கார்களின் விற்பனையை இந்த முறை ஹூண்டாய் எக்ஸெண்ட், ஹோண்டா சிட்டி ஆகியவை முந்தியிருக்கின்றன.

 


 

TAGS :