ஸ்பை: சென்னையில் சிட்ரோன் C4 பிகாஸோ!
Posted Date : 12:37 (18/06/2014)
Last Updated : 12:53 (18/06/2014)
 
Motor Vikatan reader S. Maheswaran has caught the 2012 Citroen C4 Picasso in Chennai. We doubt that this car is used for Benchmarking purposes by Mahindra.
 

Citroen C4 Picasso Spied MV Chennai - Front

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் திரும்பவும் தலைகாட்டியிருக்கிறது  சிட்ரோன் C4 பிகாஸோ டெஸ்ட் கார். லெஃப்ட் ஹாண்ட் ட்ரைவ் காரான இது, 2012-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் விற்பனையாகிக் கொண்டிருந்த MPV மாடல். 2013-ஆம் ஆண்டில் இருந்து புதிய தலைமுறை C4 பிகாஸோ காரை விற்றுவருகிறது சிட்ரோன். 

இப்போது மோட்டார் விகடன் வாசகர் S. மகேஸ்வரன் சென்னையில் இந்த காரை ஸ்பை படம் எடுத்துள்ளார். 
/Citroen C4 Picasso Spied Chennai - Rear
 
சிட்ரோன் C4 பிகாஸோ காருக்கு சென்னையில் என்ன வேலை?
 
வெளிநாடுகளில் விற்பனையாகும் கார்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்து பெஞ்ச்மார்க்கிங் சோதனைகளை செய்து பார்ப்பது கார் நிறுவனங்களின் வழக்கம். தாங்கள் உருவாக்கிவரும் கார்களை, அதற்கு சமமான இன்னொரு காருடன் ஒப்பிட்டு சோதனை செய்வார்கள். 
 
சிட்ரோன் C4 பிகாஸோ காரின் பதிவு எண் மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் இருக்கும் இடத்தைச் சேர்ந்தது. எனவே இந்தக் காரை மஹிந்திரா நிறுவனம் பெஞ்ச்மார்க்கிங் செய்துகொண்டிருக்க  வாய்ப்புள்ளது. 
TAGS :   Citroen, Chennai, Motor Vikatan, Spyshots