விற்பனைக்கு வந்துவிட்டது புதிய யமஹா FZ-S FI V2.0 & FZ FI V2.0
Posted Date : 12:26 (03/07/2014)
Last Updated : 15:06 (03/07/2014)
 
2014 ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா நிறுவனம்  FZ-S FI V2,  FZ FI V2.0 பைக்குகளை கான்செப்ட் மாடல்களாக அறிமுகப்படுத்தியது. இவற்றின் தயாரிப்பு மாடல்களை இப்போது விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது யமஹா. 

 

பழைய FZ-S, FZ பைக்குகளுக்கும், புதிய மாடல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஸ்டைலிங் விஷயத்தில் முன்பைவிட இரண்டு பைக்குகளுமே மிரட்டலாகவும், கட்டுவெட்டுத் தோற்றம் கொண்டதாகவும் உள்ளன. இரு பைக்குகளின் ஹெட்லைட், டெயில் லைட், சைலன்ஸர் கேன், ஸ்ப்ளிட் சீட்டுகள், இன்ஸ்ட்ருமென்ட் கன்ஸோல் ஆகியவை முற்றிலும் புதிய டிஸைனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய மாடலைப் போலவே புதிய FZ பைக்கிலும் வைஸரும், ஸ்டிக்கர்களும் கிடையாது. 

புதிய FZ பைக்குகளில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம், இன்ஜின். புதிய 'BlueCore' இன்ஜின் கொண்டுள்ள  இந்த பைக்குகளில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்ஜினின் கொள்ளளவு 153 சிசியில் இருந்து 149 சிசியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய யமஹா FZ பைக்குகள் 12.92 hp சக்தியும், 1.30 kgm டார்க்கையும் அளிக்கின்றன. பழைய மாடலைவிட சுமார் 1 hp சக்தி குறைவு. சக்தி குறைந்தாலும், பைக்கின் பெர்ஃபாமென்ஸ் அப்படியேதான் இருக்கும் என்கிறது யமஹா. மேலும்,  புதிய பைக்குகள் 14 சதவிகிதம் அதிக மைலேஜ் தரும் என்கிறது யமஹா. இதற்குக் காரணம் எடையாகவும் இருக்கலாம். முன்பைவிட 3 கிலோ எடை குறைவாக இருக்கின்றன புதிய FZ பைக்குகள்.

2014 யமஹா FZ-S FI V2.0 - ரூ. 78,250
2014 யமஹா  FZ FI V2.0 - ரூ. 76,250

(விலைகள் எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

புதிய FZ பைக்குகள் அறிமுகமானாலும், பழைய மாடல்களைவிட இவை சுமார் 5,000 ரூபாய் விலை அதிகம் என்பதால், பழைய மாடல்கள் தொடர்ந்து விற்பனையாகும் என அறிவித்துள்ளது யமஹா. 
 
Photo Gallery (Click on the images for High Res)

Yamaha-FZ-FI-V2_0-Panther-Black Yamaha-FZ-FI-V2_0-Scorching-red
 Panther Black              2014 Yamaha FZ FI V2.0              Scorching Red 
 
Cyber Green                                  Molten Orange                          Moonwalk White
 
Astral Blue
2014 Yamaha FZ-S FI V2.0 
TAGS :   yamaha, india, fz, fz-s, new model, price