எலெக்ட்ரிக் காருக்கு ரீசேல் வேல்யூ அதிகம்!
Posted Date : 12:10 (11/07/2014)
Last Updated : 12:48 (11/07/2014)

ஹிந்திராவின் கட்டுப்பாட்டுக்குள் ரேவா வந்தபிறகு, பெங்களூருவில் உள்ள அதன் தொழிற்சாலைக்கு முதல் விசிட் அடித்தோம். அங்கு மோட்டார் விகடனுக்கு மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் CEO, சேத்தன் மைனி அளித்த பேட்டி! 

   

''e2oல் பவர் ஸ்டீயரிங் இருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்குமே?''

''நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், ஒரு எலெக்ட்ரிக் காரை உருவாக்கும்போது விலைக்கும், ரேஞ்சுக்கும், வசதிகளுக்கும் நிறைய பேலன்ஸ் செய்ய வேண்டியது இருக்கும். e2o காரில் பவர் ஸ்டீயரிங் சேர்த்தால், அதன் ரேஞ்ச் பாதிக்கும். ஏனென்றால், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை அதுவே எடுத்துக்கொள்ளும். ரேஞ்ச் குறைந்தால், அதற்கேற்றவாறு பேட்டரியை மேம்படுத்த வேண்டியிருக்கும். இதனால், விலையும் அதிகமாகும். அதனால், பவர் ஸ்டீயரிங்கை e2o காரில் ரேஞ்ச் பாதிக்கப்படாதவாறு சேர்ப்பதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறோம்.''

''பெட்ரோல்/டீசல் கார்களுக்கு ரீ-சேல் வேல்யூவைக் கணக்கிட ஒரு முறை இருக்கிறது. ஆனால், e2o போன்ற ஒரு எலெக்ட்ரிக் காருக்கு ரீ-சேல் மதிப்பு இருக்குமா?''

''எலெக்ட்ரிக் கார்களுக்கான ரீ-சேல் வேல்யூவைக் கணக்கிட, ஒரு தெளிவான திட்டம் இதுவரை இந்தியாவில் இல்லை. ஆனால், மற்ற கார்களுக்கான ரீ-சேல் வேல்யூவைக் கணக்கி டுவதற்கும், எலெக்ட்ரிக் கார்களுக்கான ரீ-சேல் வேல்யூவைக் கணக்கிடுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களில் இன்ஜின், நகரும் பாகங்கள் மற்றும் அதிர்வுகள் கிடையாது. எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காரின் தேய்மானம் மிக மிகக் குறைவுதான்.

இதனால், பெட்ரோல் / டீசல் கார்களைவிட இதன் ரீ-சேல் வேல்யூ மிகவும் அதிகம். மேலும், ஒரு பெட்ரோல்/டீசல் காரின் இன்ஜின் வாழ்நாள் முடிந்த பின்பு, நம்மால் புது இன்ஜின் மாற்றி விற்க முடியாது. ஆனால், இதுவே பேட்டரியால் இயங்கும் கார் என்றால், பேட்டரியை மட்டும் மாற்றிவிட்டால் போதும்; உங்களுக்குப் புது காராக மாறிவிடும் அல்லவா?! இன்ஜினை மாற்றுவதைவிட பேட்டரியை மாற்றுவது எளிதுதானே!''

''மஹிந்திரா ரேவா e2o தமிழகத்தில் விற்பனைக்கு வருமா?''

''இது பற்றிப் பரீசீலித்துக் கொண்டு இருக்கிறோம். விரைவில் முடிவு தெரியும்.''

மஹிந்திரா ரேவா e2o கார் உருவாகும் தொழிற்சாலை, e2o டெஸ்ட் டிரைவ் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் -> http://bit.ly/VRUDVM

[மோட்டார் விகடன் - ஏப்ரல் 2014 இதழில் இருந்து]

TAGS :   Motor Vikatan, Interviews, Mahindra Reva, CEO, Chetan Maini, Electric cars, e2o, resale value