விற்பனைக்கு வந்தது 2014 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் - விலை ரூ. 5.91 லட்சம் முதல்!
Posted Date : 16:48 (16/07/2014)
Last Updated : 17:13 (16/07/2014)

      2014 Volkswagen Polo Facelift Launch   

     (Mahesh Kodumudi, President and Managing Director, Volkswagen India Pvt. Ltd and Michael Mayer, Director, Volkswagen Passenger Cars, Volkswagen Group Sales India Pvt. Ltd)

2014 போலோ ஃபேஸ்லிப்ஃட் மாடலை  இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது ஃபோக்ஸ்வாகன். புதிய போலோவின் டிசைனில் அதிக மாற்றங்கள் இருக்கிறது. முன்/பின் பம்பர்கள், க்ரில், ஹெட்லைட்ஸ், சென்டர் கன்சோல், அலாய் வீல்  ஆகியவற்றின் டிசைன் புதிதாக இருக்கிறது. புதிய மாடலில் ஃப்ளாட்-பாட்டம் (Flat Bottomed - கால் இடவசதி, ஸ்போர்ட்டியான தோற்றத்துக்காக) ஸ்டீயரிங் வீல் உள்ளது. இரண்டு காற்றுப்பைகள் அனைத்து வேரியன்ட்டுகளிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகின்றன. 

/2014 Volkswagen Polo Interior 2014 Volkswagen Polo

இந்த ஃபேஸ்லிப்ஃட் மாடலில் உள்ள மிகப்பெரிய மாற்றம் புதிய 1.5 லிட்டர் TDI 4 சிலிண்டர் டீசல் இன்ஜின். 1,498சிசி கொள்ளளவு கொண்ட இந்த இன்ஜின், 1.5 TDI வேரியன்ட்டில் 88 hp சக்தியையும்,  23.45 kgm டார்க்கையும் அளிக்கிறது. GT TDI மாடலில் இதே இன்ஜின் 103 hp சக்தியையும்,  25.48 kgm டார்க்கையும் அளிக்குமாறு டியூன் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி 1.2 MPI மாடலில் அதே பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், GT TSI மாடலில் அதே 1.2 TSI டர்போ பெட்ரோல் இன்ஜினும் அளிக்கப்படுகிறது. 

2014 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் விலைகள் 
 
1.2 MPI – ரூ. 5.91 லட்சம் – 7.16 லட்சம்
1.5 TDI – ரூ.7.39 லட்சம் – 8.66 லட்சம் 
Cross Polo 1.5 TDI  – ரூ.9.27 லட்சம் 
GT TDI – ரூ.9.42 லட்சம் 
GT TSI – ரூ.9.38 லட்சம் 

(விலைகள் ஆன் - ரோடு சென்னை)
 
க்ராஸ்போலோ, GT TDI. GT TSI மாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றன.

2014 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் ARAI மைலேஜ்

1.2 MPI – 16.47 km/l
1.5 TDI –  20.14 km/l
Cross Polo 1.5 TDI  17.21 km/l
GT TDI –  19.91 km/l
GT TSI –  20.14 km/l

டெல்லியில் நடந்த 2014 ஃபோக்ஸ்வாகன் போலோ அறிமுக விழாவில் ஃபோக்ஸ்வாகன் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மகேஷ் கொடுமுடி-யை சந்தித்தோம். 

2014 Volkswagen Polo 1_5 TDI Engineபழைய ஃபோக்ஸ்வாகன் போலோவில் ஆயில் சம்ப் எளிதாக உடைந்துவிடுவதாக நிறைய வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த பிரச்னை புதிய போலோவில் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதா?

பழைய போலோவில் ஆயில் சம்ப் உடையும் பிரச்னை இருந்தது உண்மைதான். ஆனால், 1.2 லிட்டர் டீசல் இன்ஜினில் மட்டுமே அந்த பிரச்னை இருந்தது. மற்ற இன்ஜின்களில் அந்த பிரச்னை இல்லை. அப்போது இன்ஜினுக்கு அடியில் பிளேட் ஒன்றை பொருத்தி அந்த பிரச்னையை சரிசெய்தோம். புதிய 1.5 லிட்டர் TDI டீசல் இன்ஜினில் இந்த பிரச்னை இருக்காது. காரணம், இன்ஜினே வழக்கத்தை விட சற்று மேலே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய போலோவில் ஆயில் சம்ப் எளிதாக உடைந்துவிட வாய்ப்பு இல்லை. 
TAGS :   2014, Volkswagen Polo,facelift, india, price, 1.5l tdi engine, mahesh kodumudi