புதிய ஹூண்டாய் “The Elite i20”-ன் படங்கள் - புக்கிங் இன்று முதல் துவக்கம்
Posted Date : 12:51 (01/08/2014)
Last Updated : 16:15 (01/08/2014)

ஹூண்டாய் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக, இந்தியாவில் தனது புதிய ஐ20 காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 11-ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் புதிய ஐ20 காரை, “The Elite i20” என்று அழைக்கிறது ஹூண்டாய். இந்தப் புதிய ஐ20 காரை, இன்று முதல் ஹூண்டாய் டீலர்ஷிப்பில் புக் செய்யலாம். 

All-New 'Elite i20'-  Rendering Image

புதிய எலைட் ஐ20 காரின் டிஸைன், ஜெர்மனியில் உள்ள ஹூண்டாயின் டிஸைன் சென்டரில் உருவானது. ‘Fluidic Sculpture 2.0’ டிஸைன் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய ஐ20. காரின் ஒட்டுமொத்த டிஸைன் அந்த செக்மென்ட்டிலேயே படு ஸ்டைலிஷாக இருக்கிறது. காரின் முன்பக்க க்ரில், வழக்கமான இந்திய டிஸைன்களுக்குப் பதிலாக, ஐரோப்பிய டிஸைனின் தாக்கம் தெரிகிறது. காரின் C-பில்லரில் கறுப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளதால், ஃப்ளோட்டிங் ரூஃப் எஃபெக்ட் கிடைக்கிறது.

2015-Hyundai-i20-front-view-spyshot 2015-Hyundai-i20-rear-view-spyshot

2015-Hyundai-i20-dashboard-spyshot Next-gen-Hyundai-i20-spied-Blue-and-Silver

இணையத்தில் வெளியாகிய புதிய ஐ20 மாடலின் புகைப்படங்களில் காரின் டேஷ்போர்டை பார்க்க முடிகிறது. காரின் இன்டீரியர் முற்றிலும் புதிய டிஸைனில் அமைக்கப்பட்டுள்ளது. டூயல்-டோன் டேஷ்போர்டின் சென்டர் கன்ஸோல், ஏசி கன்ட்ரோல்களுக்கும், ஆடியோ கன்ட்ரோல்களுக்கும்  தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

All-New 'Elite i20'- Rear

மெக்கானிக்கலாக காரில் என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன என்பதை ஹூண்டாய் வெளியிடவில்லை. எனவே, சின்ன மாற்றங்களோடு அதே 1.2 பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல், 1.4 டீசல் இன்ஜின்களே இந்தப் புதிய காரிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.  

TAGS :   Hyundai, I20, Sketch, India