Peugeot குழுமத்துடன் கைகோர்க்க இருக்கிறது மஹிந்திரா

ற்கனவே, மோட்டார் விகடன் வாசகர் மஹேஸ்வரன் சென்னையில் 2012 Citroen C4 பிகாஸோ கார்களை மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் அருகே ஸ்பை படம் எடுத்திருந்ததைப் பார்க்கும்போது Peugeot குழுமத்தின் கீழ் வரும் காருக்கு சென்னை மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் என்ன வேலை என சந்தேகம் கிளம்பியது. இப்போது அந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது. Peugeot குழுமத்துடன் கைகோர்க்க இருக்கிறது மஹிந்திரா

(அப்டேட்Peugeot குழுமம் இந்த தகவலை மறுத்துள்ளது. இந்திய சந்தை Peugeot குழுமத்துக்கு முக்கியம்தான் என்றாலும், இப்போதைக்கு இந்தியாவில் கால் பதிக்க எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மஹிந்திரா இந்த விஷயம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை)

/PSA-MAhindra-Deal-Motor-Vikatan 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் குழுமமான Peugeot-உடன் மஹிந்திரா நிறுவனம் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஏற்கனவே மஹிந்திராவின் உயரதிகாரிகள் குழு பிரான்ஸிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. மஹிந்திராவும் பெழோவும் கைகோர்த்தால் ஆட்டோமொபைல் நகரமான சென்னையில் Peugeot கார்கள் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே 2012-ஆம் ஆண்டு இந்தியாவில் காலடி எடுத்துவைக்க திட்டமிட்டிருந்த Peugeot நிறுவனம், பல்வேறு சிக்கல்களால் அந்த திட்டத்தை கைவிட்டது.  இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் Peugeot நிறுவனம் தன்னுடைய கார்களை மஹிந்திராவின் தொழிற்சாலைகளில் தயாரிக்க முடியும். அதற்கு ஈடாக ஐரோப்பாவில் கால்பதிப்பதற்காக
அங்கு உள்ள Peugeot தொழிற்சாலைகளை மஹிந்திரா பயன்படுத்திக்கொள்ளும். 

மேலும், Peugeot-ன் டீசல் இன்ஜின், டீசல்-ஹைபிரிட் தொழில்நுட்பங்களின் மேல் மஹிந்திராவுக்கு ஒரு 'கண்' இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் Peugeot குழுமத்தில் முதலீடு செய்ய மஹிந்திரா விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே இரண்டு முறை முயன்றும் இந்தியாவில் கால்பதிக்க முடியாமல் போன Peugeot குழுமத்துக்கும் இதைவிட்டால் வேறு அருமையான வாய்ப்பு கிடைக்காது. காரணம் Peugeot குழுமத்தை இப்போது வழிநடத்துவது கார்லோஸ் டவாரெஸ்(பார்க்க படம்). இவர்தான் நிஸான் பிராண்டை இந்தியாவில் பிரபலமாக்கியவர். எனவே, இவரும் இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டுகிறார்.