குழந்தைகளை காரின் முன் சீட்டில் அமரவைப்பது குற்றம்!

 
சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம் - 2014 (வரைவு) 
 
த்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்ட வரைவில், 'பஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் கட்டாயம் இருக்கைகளைப் பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்; அந்த இருக்கைகளுக்கு சீட் பெல்ட்டுகள் பொருத்த வேண்டும். டவுன் பஸ், குறிப்பிட்ட இடத்துக்குள் பயன்படுத்தப்படும், அதாவது தொழிற்சாலை, ஏர்போர்ட் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பஸ்களுக்கு, சீட் பெல்ட் கட்டாயம் இல்லை. மற்ற பஸ்களில் பயணம் செய்வோர் சீட் பெல்ட் அவசியம் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிவதை, பஸ் நடத்துநர் அல்லது ஓட்டுநர் நேரடியாகவோ அல்லது  ஆடியோ, வீடியோ மூலமாகவோ பயணிகளுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.
 
 
காரில் 8 வயதுக்கும் குறைவானக் குழந்தைகளை முன் சீட்டில் உட்காரவைத்துக்கொண்டு காரை ஓட்டக் கூடாது. 8 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன் சீட்டில் உட்காரலாம். ஆனால், கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். அப்படி சீட் பெல்ட் அணியாமல் குழந்தைகளை அழைத்துச் சென்றால், குற்றம் செய்தவர் ஆவார். மேலும், 14 வயதுக்குக் குறைவான குழந்தை காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தாலும், சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டியது அவசியம்.
உடல் நிலை அல்லது மருத்துவத்தின் அடிப்படையில் சீட் பெல்ட் அணியக்கூடாதவர்கள் அல்லது அணிய முடியாதவர்கள், அதற்கான மருத்துவச் சான்றை வைத்திருக்க வேண்டும் அல்லது அந்த மருத்துவச் சான்றை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் காட்டி, போக்குவரத்துத் துறையில் அனுமதி சான்று பெற்றிருந்தால், சீட் பெல்ட் அணியத் தேவை இல்லை' என்று புதிய சட்ட வரைவில் கூறப்பட்டுள்ளது.