ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை நடக்க இருக்கிறது SIAT - 2015!
Posted Date : 19:02 (08/01/2015)
Last Updated : 19:02 (08/01/2015)

 14-வது முறையாக 'சிம்போஸியம் ஆன் இன்டர்நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி' (SIAT) கருத்தரங்கை இந்தியாவில் நடத்த இருக்கிறது ஆட்டோமொபைல் ரிஸர்ச் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (ARAI). வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை புனேவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்க, இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மிக முக்கியமான நிகழ்வு. இந்த வருடம் 'பாதுகாப்பான, தூய்மையான, அமைதியான வாகனங்கள்' என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகிறது இந்த கருத்தரங்கம். 

 

ASHOK-LEYLAND-ARAI-SIAT-2015

 
SIAT - 2015 கருத்தரங்கு சம்பந்தமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் ARAI-ன் தலைவருமான வினோத் தாசரி, ARAI அமைப்பின் இயக்குனர்  Rashmi Urdhwareshe ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது வினோத் தாசரி, '' 'SIAT கருத்தரங்கு மூலம் வாகனங்கள் 'மேக் இன் இந்தியா'வாக மட்டுமில்லாமல், டிஸைன் இன் இந்தியாவாக இருக்க ஊக்கப்படுத்த இருக்கிறோம். இந்தியாவில் நடக்கும் கருத்தரங்கு என்றாலும் உலக அளவில் இருந்து பல முக்கியமான ஆட்டோமொபைல் வல்லுனர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றனர்'' என்றார். 
 
ARAI-ன் இயக்குனர்   Rashmi Urdhwareshe 'இந்தியச் சந்தையில் பாதுகாப்பான, காற்றை மாசுபடுத்தாத வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்காக அரசுடன் ARAI இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்த கருத்தரங்கு மூலம் ஆட்டோமொபைல் துறை மட்டுமில்லாமல், மாணவர்களும்கூட இந்த துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை அப்-டு-டேட்டாக தெரிந்துகொள்ளவும், எண்ணங்களைப் பரிமாற்றிக்கொள்ளவும் முடியும்'' என்றார். 
 
படம்: ஆ. முத்துகுமார்
TAGS :   arai, ashok leyland, siat 2015, symposium, vinod dasari, Rashmi Urdhwareshe