டீசலைவிட குறைவான விலையில் விமானத்தின் எரிபொருள் - இந்தியா!
Posted Date : 16:14 (02/02/2015)
Last Updated : 16:15 (02/02/2015)

வியேஷன் டர்பைன் ஃப்யூல் என்று அழைக்கப்படும் விமான எரிபொருள்(ஜெட் ஃப்யூல்) ஒரு லிட்டரின் விலை 51.18 ரூபாய்(சென்னை). இதே சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலையோ 51.34 ரூபாய். எப்படி இப்படி?

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விமான எரிபொருளின் விலையை 30 சதவிகிதம் குறைத்தது மத்திய அரசு. உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, விமான எரிபொருளின் விலை பெட்ரோலைவிட குறைந்தது. ஆனால், நேற்று 11.27 சதவிகிதம் விலை குறைக்கப்பட, டீசலைவிட விமான எரிபொருளின் விலை குறைந்தது. 

இந்திய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்தபோது, வரியை மத்திய அரசு அதிகரித்தது. அதனால், பெரிய அளவில் இவற்றின் விலையில் வீழ்ச்சி இல்லை. இப்போது, ஜெட் ஃப்யூலின் விலை நம் வாகனங்களுக்கான  பெட்ரோல், டீசல் விலையைவிட குறைவாக இருப்பதைப் பார்த்தால், ஒரு போயிங் விமானத்தையோ, ஏர் பஸ் விமானத்தையோ வாங்கி வைத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. 

TAGS :   het,fuel, cheaper, diesel, india