Exclusive: தீவிர டெஸ்டிங்கில் 2016 ஃபோர்டு எண்டேவர் - ஸ்பை படங்கள்!
Posted Date : 15:54 (25/03/2015)
Last Updated : 16:19 (25/03/2015)

ந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை எண்டேவர் காரை மோட்டார் விகடன் வாசகர் மணிகண்டன் சுப்பராயலு திண்டிவனம் அருகே ஸ்பை படம் எடுத்துள்ளார். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு 3 புதிய ஃபோர்டு எண்டேவர் கார்கள் டெஸ்டிங்குக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட எண்டேவரில் மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட 2 கார்களும், 3.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஒரு காரும் டெஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. 

(Blue, 2.2L Diesel engine, Manual Transmission)

மேலே கூறப்பட்டுள்ள 3 கார்களையுமே படம் எடுத்துள்ளார் நமது வாசகர் மணிகண்டன் சுப்பராயலு. நீல வண்ணக் காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது 160 hp சக்தியை அளிக்கக்கூடிய இன்ஜின். சில்வர் வண்ணத்தில் இருக்கும் காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த இரண்டு கார்களிலுமே 4 வீல் டிரைவ் கிடையாது.

(Black, 3.2L Diesel engine, Automatic Transmission, 4 Wheel Drive)

கருப்பு வண்ண காரில் இருப்பது 3.2 லிட்டர் டீசல் இன்ஜின். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்தக் காரில் Terrain Management தொழில்நுட்பத்துடன் 4 வீல் டிரைவ் உள்ளது. இந்த இன்ஜின் 200 hp சக்தியை அளிக்கிறது. 

(Silver, 2.2L Diesel engine, Automatic Transmission)

2016 Ford Endeavour - Everest

CKD முறையில் இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு தீபாவளி சமயம் விற்பனைக்கு வர உள்ளது புதிய எண்டேவர். 

 [Spy Pictures by Motor Vikatan Reader Manikandan Subbarayalu; Location: Acharapakkam]

TAGS :   2016 ford everest endeavour spied in india, ford endeavour new, ford endeavour new launch date, exclusive spy shots, vikatan, motor vikatan, விகடன், thailand,