மோட்டோஜிபி-ல் பிஎம்டபிள்யூவின் வாட்டர்-இன்ஜெக்‌ஷன் டெக்னாலஜி!
Posted Date : 16:36 (31/03/2015)
Last Updated : 16:36 (31/03/2015)

த்தாரில் நடந்த 2015 மோட்டோஜிபி சாம்பியன்ஷிப்பில் ஒரு இன்ட்ரெஸ்டிங்கான 'கார்' அறிமுகமானது. சாம்பியன்ஷிப்பின் சேஃப்டி காராக அறிமுகமான பிஎம்டபிள்யூ M4 சேஃப்டி கார் ரொம்பவே ஸ்பெஷல். பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை இந்தக் காரில் வைத்துதான் டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது. 

 

'வாட்டர் இன்ஜெக்‌ஷன்' என்று பிஎம்டபிள்யூ அழைக்கும் இந்த தொழில்நுட்பம் விரைவில் தன்னுடைய மற்ற கார்களிலும் பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

டர்போசார்ஜர் கொண்ட இன்ஜின்களை அதிக சார்ஜ் அழுத்ததிலும், விரைவான இக்னிஷன் பாயின்ட்டிலும் இயக்க இந்த வாட்டர் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்கிறதாம்.

 

M4 சேஃப்டி காரின் பின்பக்கம் 5 லிட்டர் வாட்டர் டேங்க் இருக்கும். இதில் இருக்கும் நீரை, இன்ஜின் இன்டேக்கினுள் ஸ்ப்ரே செய்து டிஸ்சார்ஜ் வெப்பம் குறைக்கிறார்கள். எனவே, இன்ஜின் knock ஆவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது. இதனால், டர்போசாரஜர் கொண்ட இன்ஜினை அதிக சார்ஜிங் பிரஷரிலும், விரைவான இக்னிஷன் பாயின்ட்டிலும் இயக்கமுடியும்.  

3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜினில், இரண்டு சிலிண்டர்களுக்கு ஒரு இன்ஜெக்‌ஷன் வால்வ் கணக்கில் மொத்தம் 3 இன்ஜெக்‌ஷன் வால்வுகள் M4 சேஃப்டி காரில் உள்ளன.  

 

இந்த டெக்னாலஜியில் உள்ள ஒரே ஒரு மைனஸ் பாயின்ட் என்னவென்றால், வாட்டர் டேங்கை அவ்வப்போது நிரப்பிக்கொள்ள வேண்டும். ரேஸ் டிராக்கில் ஓட்டினால், ஒவ்வொரு முறை காரில் பெட்ரோலை நிரப்பும்போது, இந்த வாட்டர் டேங்கையும் நிரப்ப வேண்டும். ஆனால், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது அடிக்கடி நிரப்பத்தேவையில்லை என்கிறது பிஎம்டபிள்யூ. 

 

வாட்டர் இன்ஜெக்‌ஷன் டெக்னாலஜி மூலம் பெர்ஃபாமென்ஸ் எவ்வளவு அதிகரித்துள்ளது என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கவில்லை. ஆனால், மிக விரைவில் தன்னுடைய 'M' பெர்ஃபாமென்ஸ் கார் ஒன்றில் இந்த தொழில்நுட்பம் சேர்க்கப்படும் என்று சொல்கிறது பிஎம்டபிள்யூ. அது M4 GTS கார்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆர்வலர்கள்!  

TAGS :   bmw water injection technology, bmw m4 safety car, 2015 motogp qatar