எக்ஸ்க்ளூசிவ்: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் ஸ்பை ஷாட்ஸ்
Posted Date : 15:36 (29/04/2015)
Last Updated : 15:38 (29/04/2015)

 
   World Exclusive: Royal Enfield Himalayan spied by Motor Vikatan Reader Thanga Suresh 
 
(Location: Gummidipoondi, Chennai) 

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 'ஹிமாலயன்' என்கி​ற​ பெயரில் புதிய அட்வென்சர் ​பைக்கை​ விற்பனைக்குக் கொண்டு​ வருகிறது. கும்மிடிப்பூண்டி​ அருகே டெஸ்ட் செய்யப்பட்ட இந்த பைக்கை ​உலகிலேயே முதல்முறையாக படம் எடுத்துள்ளார் மோட்டார் விகடன் வாசகர் தங்க சுரேஷ். 

 

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் பைக்கில் புதிய 410 சிசி சிலிண்டர் இன்ஜின் உள்ளது. கான்டினென்ட்டல் ஜிடி பைக்கின் ஹெட்லைட்ஸ், முன்பக்க சஸ்பென்ஷன், எக்ஸாஸ்டைக் கொண்டுள்ளது  ஹிமாலயன்.​ ஆனால் ​கான்டினென்ட்டல்​ ஜிடியில் இருந்த டபுள் சஸ்பென்ஷனுக்கு பதிலாக மோனோஷாக் சஸ்பென்ஷன் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ​பின்பக்க டயர் பெரியதாக இருக்கிறது. இரண்டு வீல்களிலுமே டிஸ்க் பிரேக் உள்ளது.​ அடுத்த ஆண்டு​ விற்பனைக்கு வர இருக்கிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரர். விலை​ 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். ​

TAGS :   royal enfield himalayan, royal enfield, himalayan adventure royal enfield, ராயல் என்ஃபீல்டு புல்லட், புல்லட், கிளாஸிக் 350, World Exclusive: Royal Enfield Himalayan spied by Motor Vikatan Reader, vikatan, மோட்டார் விகடன், motor vikatan, anantha vikatan, royal enfield 400cc, 410 cc engine