செலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கவேண்டுமா?
Posted Date : 18:49 (19/05/2015)
Last Updated : 18:59 (19/05/2015)

+2 முடிச்சாச்சு. மார்க்கும் எடுத்தாச்சு. இன்ஜினியரிங்தான் படிக்க ஆசை. ஆனால், உலகத்தரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க ஆசை என்றால் பணம் வேண்டுமே. கவலையை விடுங்க. காசே இல்லாம ஜப்பானிலேயே இன்ஜினியரிங் படிக்கலாம். 2016-ம் ஆண்டுக்கான ஜப்பான அரசு உதவித்தொகைத் திட்டம் துவங்கிவிட்டது. 1994-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை பிறந்தவர்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நடக்கும் தேர்வு மூலம் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். 

 

மெக்கானிக்கல் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளுக்கு மொத்தம் 3 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க இருக்கிறது ஜப்பான் அரசு. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 5 வருடங்களுக்கு இந்த உதவித்தொகை உண்டு. இதில், ஒரு வருடம் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கப்படும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளத்தேவையில்லை. எனவே, அவர்களுக்கு 4 வருடங்கள்தான். படிப்பு காலம் முழுவதும் மாதத்துக்கு சுமார் 62,000 ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. படிப்புக்காக கட்டணம் கிடையாது. ஜப்பான் சென்றுவருவதற்கான விமான டிக்கெட்  செலவுகளையும் ஜப்பான் அரசே ஏற்றுக்கொள்கிறது.   

ஜப்பானிய மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 2016-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். ஜூன் 17-ம் தேதிக்குள் கட்டாயம் விண்ணப்பித்துவிட வேண்டும். மேலும் தொடர்புக்கு கலாசாரம் மற்றும் தகவல் மையம், ஜப்பான் தூதரகம் சென்னை - 044-24323860-63   

மேலும் தகவல்களுக்கு http://www.in.emb-japan.go.jp/Education/japanese_government_scholarships.html

TAGS :   Japan, MEXT, scholarship, india 2016