மிழகத்தில், ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் தலைமையகமாகச் சொல்லப்படுவது கோவை. கட்டுமானம், தொழிற்சாலை, விவசாயம், விளையாட்டு என எல்லா துறைகளிலும் கோலோச்சுபவர்கள் கோவையில் அதிகம். அதேபோல், ஆட்டோமொபைல் சார்ந்த சர்வீஸ் விஷயத்திலும் சளைத்தது அல்ல இந்த ஊர். சமீபத்தில் கோவை மேற்கு பகுதி மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் சங்கம், தனது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. சுமார் 500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கம், வெறும் கொண்டாட்டத்துக்காக ஆண்டுக்குக்கு ஒருமுறை கூடாமல், நவீன தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது; பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது என பல ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்து வருகிறது. 

 

சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியத்திடம் பேசினோம். ''2௦௦6-ம் ஆண்டில் 3௦ உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பித்தோம். இந்த ஒன்பதாவது ஆண்டில் சுமார் 500 உறுப்பினர்கள் என்ற அளவில் வளர்ந்துள்ளோம். ஒவ்வொரு விஷயத்துக்கு என ஆண்டுக்கு ஒருநாலைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதுபோல, பைக் மெக்கானிக்குகளுக்கு என எந்த ஒரு நாளும் இல்லை. எனவே, மே 28-ம் தேதியை அரசு பைக் டெக்னிஷியன் நாளாக அறிவித்து, அதை தமிழகத்தில் கொண்டாட வேண்டும்'' என்றார். 

 

விழாவில்  கோவை மேற்குப் பகுதி மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் 63 ஆண்டுகளாகவும், தர்மன் என்பவர் 5௦ ஆண்டுகளாகவும் மெக்கானிக்குகளாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கௌரவிக்கும் விதமாக, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கினர்.

 

தொகுப்பு,படங்கள் - த.ஸ்ரீநிவாசன்